Trisha: என்னடா இப்படியெல்லாம் செய்யறீங்க.. த்ரிஷாவுக்கு லிப் லாக் முத்தம்.. எல்லை மீறிய எடிட்டிங்

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு நடிகை ஐந்து ஆண்டு காலத்திற்கு நீடிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். எப்பேர்பட்ட நடிகையாக இருந்தாலும், அந்த நடிகை தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தாலும் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் அல்லது அதிக பட்சம் ஐந்து ஆண்டுகள்தான். அந்த அளவுக்கு தமிழ் சினிமா உலகம் சவாலானது. இங்கு கதாநாயகனாக நீடிப்பதில் இருக்கும் சவாலை விட, கதாநாயகியாக நீடிப்பதில் இருக்கும் சவால் அதிகம். அப்படியான தமிழ் சினிமாவில், துணை நடிகையாக இருந்து, நடிகையாக மாறி, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்ததுடன் அந்த இடத்தில் தொடர்ந்து நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா.

இவர் ஒரு படத்தில் நடிக்கின்றார் என்றாலே, ரசிகர்கள் குஷி ஆகிவிடுவார்கள். நடிகர் விஜய்க்கு திரையில் மிகவும் பொருத்தமான ஜோடி என நடிகை த்ரிஷாவை ரசிகர்கள் கூறுவது உண்டு. நடிகை த்ரிஷா தொடக்கத்தில் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவ கதைகளில் நடித்தாலும், அதன் பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

trisha goat matta song

தமிழ்நாட்டினைச் சேர்ந்த தமிழ் பொண்ணான த்ரிஷா, தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். குறிப்பாக தெலுங்கில் இன்றைக்கும் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தமிழ் சினிமாவில் சீனியர் நடிகையாக மாறிவிட்டார், இனி இவரை வைத்து படங்கள் இயக்குவது என்பது வணிக ரீதியாக எடுபடுமா என்ற கேள்வியை இதுவரை இவர் ஏற்படுத்தவே இல்லை எனக் கூறலாம்.

த்ரிஷா: கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் குந்தவையாக நடித்த த்ரிஷா, இந்தக் கதாபாத்திரத்திற்கு தன்னைவிட் பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது எனக் கூறும் அளவிற்கு தரமான நடிப்பினை வெளிப்படுத்தினார். படம் ரிலீஸுக்கு முன்னர் படக்குழு வெளியிட்ட இவரது புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. படம் ரிலீஸின்போது, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை குந்தவை என மாற்றி வைத்துக் கொண்டார். இதனால் தனது எக்ஸ் பக்கத்துக்கான ப்ளூ டிக்கையும் இழந்தார்.

கோட்: இப்படியான நிலையில், சமீபத்தில் வெளியான விஜய்யின் கோட் படத்தில் நடிகை த்ரிஷா, 'மட்ட’ பாடலுக்கு நடனம் ஆடினார். இது படத்தில் படக்குழு வைத்திருந்த சர்ப்ரைஸ். இதனை எதிர்பார்க்காத ரசிகர்கள் திரையரங்கில் த்ரிஷாவைக் கொண்டாடி தீர்த்தனர். இது த்ரிஷாவுக்கும் படக்குழுவுக்கும் த்ரிஷா ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

மட்ட: மட்ட பாடல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்ட் ஆனது. குறிப்பாக த்ரிஷாவின் வருகை, பாடலில் இடம்பெற்ற கில்லி படத்தின் அப்படி போடு பாடலின் நடன அசைவுகள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதனை ரசிகர்கள் மற்றும் இணைதளத்தில் பிரபலமாக உள்ளவர்கள் தொடங்கி, சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் வரை அனைவரும் ரீல்ஸ் செய்து பதிவிட்டனர்.

வீடியோ: இப்படியான நிலைய்ல் ஒரு கோளாறான ரசிகர் ஒருவர், இந்த பாடலுக்கு நடிகை த்ரிஷாவுடன் தான் நடனமாடுவதைப் போல எடிட்டிங் செய்துள்ளார். ஆனால் இந்த எடிட்டிங்கில் எல்லை மீறிப்போய் நடிகை த்ரிஷாவுக்கு லிப் லாக் முத்தம் கொடுப்பதைப் போலவும், நடிகை த்ரிஷாவை கட்டிப்பிடிப்பது போலவும் எடிட் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் எல்லை மீறிப் போகின்றார்கள் எனவும், ஒரு சிலர் என்னடா பண்ணி வெச்சு இருக்கீங்க, லிப்லாக் முத்தம் எல்லாம் கொடுக்கறீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலரோ விஜய் மட்டும்தான் லிப்லாக் முத்தம் கொடுப்பாரா, நாங்களும் கொடுப்போம் என கமெண்ட் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இப்படி வீடியோ பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சிலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X