twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது.. பெண்களிடமும் தவறு இருக்கிறது..பிரபல இயக்குநர் அதிரடி!

    |

    Recommended Video

    Meera Mithun Press Meet | Karuthukalai Padhivu Sei | Meera Mithun | Audio Launch

    சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமமை சம்பவம் குறித்து பேசிய பிரபல இயக்குநர் ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என தெரிவித்துள்ளார்.

    எம்.பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ' கருத்துக்களை பதிவுசெய்'. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.

    இதில் இயக்குநர் பாக்யராஜ், எஸ்வி சேகர், தயாரிப்பாளர் கே ராஜன், நடிகை மீரா மிதுன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.

    நேற்று பட்டன் போடாமல்.. இன்று யானை மீது அமர்ந்து கவர்ச்சி குளியல்.. வேற லெவலில் மிரட்டும் சாக்ஷி!நேற்று பட்டன் போடாமல்.. இன்று யானை மீது அமர்ந்து கவர்ச்சி குளியல்.. வேற லெவலில் மிரட்டும் சாக்ஷி!

    துணிந்து கருத்து

    துணிந்து கருத்து

    அப்போது பேசிய இயக்குநர் பாக்யராஜ், நான் திரைத்துறையில் இந்தளவுக்கு வெற்றி பெற்றதற்கு காரணம் என்னுடைய கருத்துக்களை நான் துணிந்து பேசியதுதான்.

    அரசுக்கு கோரிக்கை

    அரசுக்கு கோரிக்கை

    எப்போதும் தியேட்டர்களில் ஒரு சிறிய படம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    பெண்களின் பலவீனம்

    பெண்களின் பலவீனம்

    தொடர்ந்து பொள்ளாச்சி சம்பவம் குறித்தும் பேசினார் இயக்குநர் பாக்யராஜ். பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சில இளைஞர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

    ஊசி இடம் கொடுக்காமல்..

    ஊசி இடம் கொடுக்காமல்..

    என்னை பொறுத்தவரை இளைஞர்களிடம் மட்டுமல்ல, அந்தப் பெண்களிடமும் தவறு இருக்கிறது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது. பெண்களும் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    கள்ளக்காதல் கொலை

    கள்ளக்காதல் கொலை

    ஒரு ஆண் தவறான நடத்தையுடன் இருந்தாலும் முதல் மனைவிக்கு குறை வைப்பதில்லை. ஆனால் பெண் கள்ளக் காதலனுடன் இருந்தால் அவளது கணவன் கொலை செய்யப்படுகிறான். இதை செய்தித்தாள்களில் தொடர்ந்து பார்க்கிறோம். இவ்வாறு இயக்குநர் பாக்யராஜ் தொடர்ந்து தடாலடியாக பேசினார்.

    English summary
    Director Bhakyaraj talking about Pollachi issue. He said Some youths have abused the weakness of women in the Pollachi incident. There is something wrong, not only with the young men but with the women also. Women should think and act.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X