twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'யாரோ ஹேக் செய்ய முயற்சிக்கிறார்கள்.. அந்த முட்டாள்களிடம் இருந்து..' இயக்குனர் சேரன் ட்வீட்!

    By
    |

    சென்னை: தனது ட்விட்டர் கணக்கை யாரோ முடக்கப் பார்ப்பதாக இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.

    பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உட்பட பல ஹிட் படங்களை இயக்கியவர் சேரன்.

    ஏராளமான படங்களில் நடித்தும் உள்ளார். கடைசியாக, 'ராஜாவுக்கு செக்' என்ற படத்தில் நடித்திருந்தார்.

    நள்ளிரவில் 'அன்பான' விக்கிக்கு செல்பியோட வாழ்த்து.. கேட்டா டிவிட்டர்லயே இல்லன்றாங்க நயன்!நள்ளிரவில் 'அன்பான' விக்கிக்கு செல்பியோட வாழ்த்து.. கேட்டா டிவிட்டர்லயே இல்லன்றாங்க நயன்!

    சினிமா படப்பிடிப்புகள்

    சினிமா படப்பிடிப்புகள்

    கொரோனா வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக ரத்து செய்யப்பட்டிருந்தன. இப்போது படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாததால், சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களை ஆக்டிவாக வைத்துக்கொண்டனர். சிலர் புகைப்படங்களை பதிவு செய்துகொண்டிருக்க, பலர் ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மின் கட்டணம்

    மின் கட்டணம்

    இயக்குனர் சேரனும் இந்த கொரோனா காலத்தில் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், மின் கட்டணம் தொடர்பாக கடுமையாக குரல் எழுப்பி இருந்தார். 'வீட்டுக்கு வாடகையே கட்டமுடியாதவர்கள் எங்கிருந்து மின்சார கட்டணம் இரண்டு மூன்று மடங்காக கட்டமுடியும்? இதுபோன்ற நேரங்களில் தளர்வு அளிக்கவேண்டும் அரசு' என்று கூறியிருந்தார்.

    மக்கள் கருத்து

    மக்கள் கருத்து

    பின்னர், 'எதிர்கால திரையுலகப் பயணம் எந்த திசை என கணிக்க முடியாமல் குழம்பிக் கிடக்கிறது சினிமா இன்டஸ்ட்ரி. இதில் மக்களின் கருத்து என்ன? அகன்ற திரையில் படம் பார்க்கும் உணர்வு மாறியிருப்பதை ஏற்கிறீர்களா? திரையரங்கம் மீண்டும் தொடங்க எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள்? என்று ட்விட்டரில் கேட்டிருந்தார்.

    நீட் விவகாரம்

    நீட் விவகாரம்

    பல்வேறு பிரச்னைகள் பற்றி பேசிவந்த சேரன், நீட் விவகாரம் தொடர்பாகவும் கருத்து தெரிவித்து இருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக சில நெட்டிசன்ஸ் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் சேரனுக்கு ஆதரவாகவும் கருத்து கூறியிருந்தனர். இந்நிலையில் தனது ட்விட்டர் கணக்கை சிலர் முடக்க பார்த்ததாக சேரன் தெரிவித்துள்ளார்.

    ஹேக் செய்ய முயற்சி

    ஹேக் செய்ய முயற்சி

    இதுபற்றி அவர், என் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்கள் விருப்பப்படி எனது வெரிஃபைட் பேட்ஜ் நீக்கப்பட்டிருக்கிறது. என் கணக்கில் இருந்து ஏதும் தேவையற்ற செய்திகள் வந்தால், அது என்னுடையது அல்ல. கவனமாகவும் அந்த முட்டாள்களிடம் இருந்து விலகியும் இருங்கள் என்று கூறியுள்ளார் சேரன்.

    English summary
    Director Cheran says, Any unwanted messages received from my profile its not mine'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X