twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சிம்புவை மிரட்டுறாங்க... டி. ராஜேந்தரின் ஓப்பன் டாக்

    |

    சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். அரசியல், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள மாநாடு படத்தின் வேலைகள் ஜுலை மாதமே நிறைவடைந்து விட்டது.

    Recommended Video

    யாருடனும் போட்டி இல்லை... தீபாவளி ரேசிலிருந்து பின்வாங்கியது சிம்புவின் மாநாடு!

    பிக்பாஸ் பிரபலத்துடன் ஜோடி போடப்போகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!பிக்பாஸ் பிரபலத்துடன் ஜோடி போடப்போகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    இருந்தாலும், கொரோனா லாக்டவுன் காரணமாக பலமுறை இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. முதலில் மே 14 ம் தேதி ரம்ஜானை முன்னிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. ஆனால் தேர்தல் சமயம், கொரோனா இரண்டாம் அலை, தியேட்டர்கள் மூடல் என அடுத்தடுத்த பல காரணங்களினால் ரிலீஸ் தள்ளிப் போனது.

    தீபாவளி ரிலீஸ் அறிவிப்பு

    தீபாவளி ரிலீஸ் அறிவிப்பு

    தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட உடன் மாநாடு படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் நவம்பர் 4 ம் தேதி தீபாவளியன்று மாநாடு படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதனால் ரஜினியின் அண்ணாத்த, விஷாலின் எனிமி படங்களுடன் மாநாடு படம் மோத உள்ளதால் எந்த படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்பதை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    தள்ளி போன மாநாடு

    தள்ளி போன மாநாடு

    ஆனால் திடீரென படத்தின் ரிலீஸ் தேதியை நவம்பர் 25 ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு ஆகியோர் சோஷியல் மீடியாவில் அறிவித்தனர். இதற்கு என்ன காரணம் என விசாரித்த போது, அண்ணாத்த படம் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுவதால், மாநாடு படத்தை வாங்க தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுவதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    தயங்குகிறதா படக்குழு

    தயங்குகிறதா படக்குழு

    மற்றொரு தகவலாக, ஒரே சமயத்தில் அண்ணாத்த மற்றும் மாநாடு படங்களை ரிலீஸ் செய்தால் அது தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும். கண்டிப்பாக மாநாடு படம் பெரிய அளவில் அடி வாங்குவதற்கு கூட வாய்ப்புள்ளது என படக்குழு நினைத்து, நவம்பர் 4 ம் தேதி ரிலீஸ் செய்ய தயங்குவதாகவும் கூறப்பட்டது.

    இதுதான் காரணமா

    இதுதான் காரணமா

    இதற்கிடையில் இதெல்லாம் காரணமே கிடையாது. உண்மை என்னவென்றால் மாநாடு படத்தின் கதை 2017 ல் வெளிவந்த கொரிய மொழி படமான தி டே படத்தின் காப்பியாம். இரு படங்களின் கதையும் ஒன்றாக இருப்பதால் அந்த கதையை எழுதியவர் பெரிய தொகையை காப்பீட்டு உரிமமாக தர வேண்டும் என கேட்டுள்ளாராம்.

    சிம்புவை மிரட்டுகிறார்கள்

    சிம்புவை மிரட்டுகிறார்கள்

    மாநாடு ரிலீஸ் தள்ளி போவதற்கு இப்படி பல காரணங்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிம்புவின் அப்பாவும், நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தன் மகன் சிம்பு மிரட்டப்படுவதாகவும், மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் பலர் கட்டப் பஞ்சாயத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

    தாயாரின் குமுறல்

    தாயாரின் குமுறல்

    இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை சமீபத்தில் சிம்புவின் தாயாரும், டி.ராஜேந்தரின் மனைவியுமான உஷா ராஜேந்தரும் கூறி இருந்தார். அதுவும் விஷால் பெயரை குறிப்பிட்டு, அவர் சிம்புவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சிப்பதாகவும், அதனால் தான் சிம்புவிற்கு ரெட் கார்டு போடப்பட்டதாகவும் கூறி இருந்தார். அதற்கு பிறகு சில நாட்களில் சிம்புவுக்கு எதிரான ரெட் கார்டு விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Recently producer announced that simbu's maanaadu movie release will postponed to november 25th. Now simbu's father director T.Rajender in his press meet today told reporters that his son Simbu was being intimidated and that many were plotting to prevent the release of the Maanaadu film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X