twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உன்னால மட்டும் எப்பிடிடா இப்பிடி பண்ணமுடியுது மாதவா…. என்னமோ போடா

    |

    Recommended Video

    Actor Janagaraj | நடிகர் ஜனகராஜின் நடிப்பு பரிமாணங்கள்-வீடியோ

    சென்னை: ஜனங்களின் கலைஞனான ஜனகராஜ் எத்தனையோ கேரக்டர்ல நடிச்சிருந்தாலும் கூட அவர் அக்னி நட்சத்திரம் படத்தில் மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்று உற்சாகக் குரலில் கத்திக்கொண்டே ஒடி வருவதை யாராலும் மறக்க முடியாது. அதே போல ரஜினி சார் கூட படிக்காதவன் படத்துல நடிச்ச கபாலிங்குற கேரக்டர்தான் இன்னிக்கும் நம்ம மனசுல நிக்கும்.

    சினிமாவை பொருத்த வரைக்கும் ஒவ்வொரு காலகட்டத்துலயும் யாராவது ஒருத்தர் ரொம்ப ஃபேமாசா இருப்பாங்க. பாலிவுட்ட எடுத்துக்கிட்டா, கபூர் பேமிலி 50 ஆண்டுகளா தொடர்ந்து கோலோச்சிக்கிட்டு இருக்கு. அதே மாதிரி அமீர் கான், ஷாருக் கான், சல்மான் கான் இந்த மாதிரி சில பேருங்களும் ஆக்கிரமிச்சிட்டு வர்றாங்க.

    நம்ம கோலிவுட்ட எடுத்துக்கிட்டா அதே மாதிரி ராஜ் அப்பிடிங்குற பேர் பல வருஷங்களா ஆக்கிரமிச்சுக்கிட்டு வருது. பாக்கியராஜ், பாண்டியராஜ், சத்யராஜ், ஜனகராஜ்னு சில பேர் ரொம்ப வருஷமா இருந்துக்கிட்டு வர்றாங்க. இதுல நம்ம இப்ப பாக்கப்போறது ஜனகராஜ் சார் தான்.

    என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா

    என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா

    காமெடியில் கவுண்டமணி, செந்தில் இருக்கும் போதே ரஜினி படங்களில் ஜனகராஜ் இருப்பதை தவிர்க்க முடியாது. இவரைப் பத்தி சொன்னாலே மொதல்ல நம்ம ஞபாகத்துக்கு வர்றது, 'ஏன் தங்கச்சியே நாய் கட்சிடிச்சிப்பா' அப்பிடிங்குற டயலாக்கும், எம் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டாங்குற டயலாக்கும் தான்.

    ஜனகராஜ்க்கு திருப்புமுனை

    ஜனகராஜ்க்கு திருப்புமுனை

    1970 ஆண்டுகள்லய ஜனகராஜ் சினி ஃபீல்டுல என்ட்ரி ஆயிட்டாலும் சின்ன சின்ன கேரக்டர்ல நடிச்சிட்டு வந்தாலும், செவப்பு வில்லுன்னு ஒரு படத்துலதான் வசனம் பேசி நடிக்கிறதுக்கு வாய்ப்பு கெடச்சது. அதுக்கப்புறம் அவருக்கு வந்ததெல்லாமே துண்டு துக்கடா கேரக்டர்கள் தான். 1980களின் தொடக்கத்துல கேரக்டர் ரோலா தான் நடிச்சிக்கிட்டு இருந்தாரு. பாலைவனச் சோலை, மீண்டும் கோகிலா, சிந்து பைரவி இப்பிடி சில படங்கள் நடிச்சிட்டு இருந்தாலுமே, அவருக்கு முக்கிய திருப்புமுனையா அமஞ்சது ரஜினி சார் கூட நடிச்ச படிக்காதவன் படம்தான்.

    ஜனகராஜின் படிக்காதவன்

    ஜனகராஜின் படிக்காதவன்

    படிக்காதன் படத்துல ரிக்சா வண்டிக்காரர கபாலிங்குற கேரக்டர்ல ச்சும்மா கலக்கிருப்பாரு. அதுலயும் குறிப்பா அவர் சரக்க அடிச்சிட்டு, ரஜினி சார்கிட்ட அவர் சொல்ற ஏன்ன் தங்கச்சியெ நாய் கட்சிடிச்சிப்பாஆன்னு திரும்பத் திரும்ப சொல்ற அந்த டயலாக், அந்த மாடுலேஷன் அந்த பாடி லாங்குவேஷன் வேறு பண்ணிருந்தாலுமே நிச்சயமா இந்த அளவுக்கு ஜனங்க கிட்ட ரீச் ஆயிருக்காது. அதனால தான் அவரு ஜனக ராஜ்.

    காமெடியில கலக்கல்

    காமெடியில கலக்கல்

    அந்தக் காலத்துல பெரிய ஆக்டர்ங்க கூட நடிக்குற காமெடி நடிகர்கள்லாம், யாராவது ஒருத்தர் கூடத்தான் நடிப்பாங்க. ரஜினி கூட நடிச்சா கமல் கூட நடிக்க மாட்டாங்க. ஆனா இவரு அப்பிடி இல்லாம ரெண்டு பேர் படத்துலயும் காமெடியில கலக்கி இருப்பாரு.

    ஜனகராஜ் காவியம்

    ஜனகராஜ் காவியம்

    இவர படத்துல பாத்தாலே சிரிக்க ஆரம்பிச்சுடுவோம். அதுக்கு காரணம் இவரோட காமெடித்தனமான ஃபேஸ்தான். சிரிக்கும்போது ஒரு கண்ணெ மூடி ஒரு கண்ணெ தெறந்துகிட்டு வாய முக்கோணமா வச்சிக்கிட்டு பேசுற அந்த மாடுலேஷன்தான். அதே மாதிரி தனக்கு இன்னோரு முகமும் இருக்குன்னு சொல்ற மாதிரி, நாயகன் படத்துல கமல் சார் கூடயே சின்ன வயசுல இருந்து அவர் கூட கடைசி வரைக்கும் ட்ராவல் பண்ற குணச்சித்திர கேரக்டர யாரலயும் எந்த சிச்சுவேஷன்லயும் மறக்கவே முடியாது. அந்தப் படத்த பொருத்த வரைக்கும் ஜனகராஜ்க்கு ஒரு காவியம்னே சொல்லாம்.

    ரஜினி கமலுடன் ஜனகராஜ்

    ரஜினி கமலுடன் ஜனகராஜ்

    1989ல ஒரே சமயத்துல வந்த ராஜாதி ராஜா, அபூர்வ சகோதரர்கள்னு ரெண்டு படத்துலயும் காமெடியில தூள் கௌப்பி இருப்பாரு. அதுலயும் அபூர்வ சகோதரர்கள் படத்துல பேப்பர்ல வரஞ்சிருக்குற கமல் படம் மூஞ்சிய அப்பிடி இப்பிடின்னு ஆட்டுபோது, அவரும் அதுக்கேத்த மாதிரி தன்னோட மூஞ்சிய மாத்துறதுன்னு ரியாக்சன் காட்டி சும்மா பொளந்து கட்டியிருப்பாரு. ஒவ்வொரு வாட்டியும் கமல் சார புடிக்கும் போதும் அவர் காட்டுற ரியாக்ஷன்

    ஜனகராஜ் அலப்பறை

    ஜனகராஜ் அலப்பறை

    அதே மாதிரி தான் அக்னி நட்சத்திரம் படத்துல வி.கே.ராமசாமி கூட சேந்துகிட்டு அவர் பண்ற லூட்டி இருக்கே, அத்தனையும் அதகளம் தான். குறிப்பா அவரோட பெண்டாட்டியே பஸ் ஏத்தி அனுப்பிட்டு அவர் சொல்ற எம்பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா, எம்பொண்டாட்டீ ஊருக்கு போயிட்டான்னு பஸ்டாண்டையே சுத்தி வந்து அமர்க்களம் பண்ற சீன், சான்சே இல்லீங்க.


    English summary
    Janakraj, the artist of the people. He was acting with Superstar Rajini in Padikkathavan film. The famous dialogue said ’En thangachiye naai kadchidichipaa’.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X