பிக் பாஸ் கொண்டாட்ட புரமோவில் பொங்கி வழியும் சோம் – ரம்யா ரொமான்ஸ்.. கவர் பண்ணாரா? பண்ணுவாரா?
சென்னை: பிக் பாஸ் கொண்டாட்டம் வரும் ஞாயிறு மதியம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
அதை முன்னிட்டு தற்போது புதிய புரமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
சோமசேகர் சாக்கலேட் கவர் கொடுத்து ரம்யாவை கவர் பண்ண பார்த்த ரொமான்ஸ் காட்சிகள் புரமோவில் பொங்கி வழிகின்றன.

சோகத்தில் ரசிகர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 கிராண்ட் ஃபினாலேவுடன் முடிந்த நிலையில் பிக் பாஸ் ரசிகர்கள் ரொம்பவே போர் அடித்துப் போயுள்ளனர். கடந்த 100 நாட்களாக ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஆர்மியை உருவாக்கிக் கொண்டு புரமோ வரும் போதெல்லாம் சமூக வலைதளங்களில் புதிய போர்களையே நிகழ்த்தியவர்கள் தற்போது ஓய்ந்து போயுள்ளனர்.

வரும் ஞாயிற்றுக்கிழமை
பிக் பாஸ் தமிழ் 3வது சீசன் அளவுக்கு இந்த சீசன் இல்லை என்றாலும், வசதிக்கு இல்லைன்னாலும் பரவாயில்லை அசதிக்காவது பார்ப்போமே என பலரும் பார்த்து இந்த சீசனிலும் அடிக்ட் ஆகி விட்டனர். வரும் ஞாயிற்றுக் கிழமை அந்த ரசிகர்களை மீண்டும் குஷிப்படுத்த பிரம்மாண்ட பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

ரம்யா ஆர்மி
தற்போது வெளியாகி இருக்கும் அட்டகாச புரமோவில் ரம்யா பாண்டியனின் ஆர்மியினர் அவருக்கு மாலை அணிவித்து, பூங்கொத்துகள் கொடுத்து உற்சாகமாக தலைவி.. தலைவி என கோஷம் எழுப்பும் அட்டகாசமான புரமோ வெளியாகி உள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மத்தியில் டஃப் கன்டெஸ்டன்ட்டாக கடைசி வரை இருந்தவர் ரம்யா.

அழுத ரசிகை
ரம்யா பாண்டியனை அருகில் பார்த்ததும் ரம்யா பாண்டியனின் ஆர்மியில் இருந்த ரசிகை ஒருவர் கண்ணீர் விட்டு அழுததை பார்த்த ரம்யா பாண்டியன் அழாதீங்க என ஆறுதல் கூறுகிறார். மேலும், இவங்களாம் இப்படி கொடுத்த சப்போர்ட்டால் தான் உள்ள நான் அப்படி சிரித்துக் கொண்டு இருந்தேன். இனிமேலும் எப்பவும் சந்தோஷமா சிரிச்சிட்டே இருப்பேன் என்றார்.

டிடி செம கலாய்
ரம்யா பாண்டியன் ஆர்மியில் இருந்த ஒரு பெண் டைரி மில்க் சாக்கலேட் கொடுக்க அதை வாங்கிய மாகாபா ஆனந்த், இந்த சாக்லேட்ட எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என ஆரம்பிக்க, டிடி சோமை பார்த்து என்னப்பா சாக்கலேட் கொடுத்து கவர் பண்ண சொன்னா வெறும் கவர கொடுத்திருக்க என மரண பங்கமாக மேடையிலேயே சோமை வச்சு செய்தார்.

மாட்டிக்கிட்ட பங்கு
இந்த டைரி மில்க்கை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என மாகாபா ஆனந்த் ஆரம்பித்து வைக்க ஒட்டுமொத்த பிக் பாஸ் போட்டியாளர்களும் லவ்வர் பாயான சோமசேகரை கலாய்த்து சிரிக்க ஆரம்பித்தனர். அருகே இருந்த கேபி சோமை கட்டிப்பிடித்து கலாய்த்து சிரிக்க, நான் எதுவுமே பண்ணலைங்க என்பது போல் சோம் செய்யும் ரியாக்ஷன் செம!

ஆரி கோல்
அவர் கவர் பண்ணனும் தான் அந்த கவரை ரொம்ப நாளா வச்சிருந்தாரு என டைட்டில் வின்னரான ஆரி, கிடைத்த கேப்பில் சரியா கோல் அடித்துள்ளார். எல்லா கமெண்ட்டுகளுக்கும் ரம்யா பாண்டியன் மீண்டும் சிரித்தே சமாளித்து வருகிறார். சோம் அவரை கவர் பண்ணாரா? கவர் பண்ணுவாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











