சட்டென்று மாறிய சோம்.. பாலாவுக்கு சப்போர்ட்.. ஆரிக்கு எதிர்ப்பு.. நீங்க பேசுறதே இப்ப தான பாஸ்!

சென்னை: இரண்டாவது புரமோவின் நீட்சியாக மூன்றாவது புரமோவிலும் ஆரியை பற்றி ஹவுஸ்மேட்கள் முன்னிலையில் சோமசேகர் குறை சொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது புரமோவில் ரியோவுடன் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசி ஒத்திகை பார்த்துக் கொண்ட சோமசேகர், மூன்றாவது புரமோவில் அதனை வெளிப்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.

கடைசியில் ஹவுஸ்மேட்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்லும் டாஸ்க் வந்துவிட்டது.

லவ் பெட் அடிமைகள்

லவ் பெட் அடிமைகள்

ரியோவும் சோமசேகரும் இன்னமும் லவ் பெட் அடிமைகளாகவே உள்ளனர். கேபி எதில் கலந்துக்க மறுக்கிறாரோ, அப்போது அவரை கழட்டி விட்டு இருவரும் விவாதிப்பதாகவே தெரிகிறது. இரண்டாவது புரமோவில், பாலாவை நல்லவனாகவும், ஆரியை கெட்டவனாகவும் பார்க்க ஆரம்பித்த சோமசேகர் மூன்றாவது புரமோவிலும் அதையே தொடர்கிறார்.

ஆரி மட்டுமே

ஆரி மட்டுமே

குறை சொல்லும் டாஸ்க்கில் அனைவரது குறியும் அதிகளவில் ஆரியை மட்டுமே குறிவைக்கும் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்று தான். சோமசேகர், ரியோ ராஜ் ஆரியை பற்றி குறை சொல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் இடம்பெற்றுள்ளன. நிச்சயம் பாலாவும் ஆரியை குறை சொல்லுவார் என்றே தெரிகிறது. ஆரி யாரை குறை சொல்லப் போகிறார் என்பதை காணவும் ரசிகர்கள் வெயிட்டிங்

வேர்க்கடலை தீர்ந்துவிட்டதா

வேர்க்கடலை தீர்ந்துவிட்டதா

ஆரி ஒரு போதும் சோமசேகரை சேஃப் கேம் ஆடுகிறார் என்று கூட விமர்சித்தது கிடையாது. ரியோவையும், பாலாவையும் விமர்சித்துள்ளார். ஆனால், சோமசேகரை வேர்க்கடலை சாப்பிடுறவன்லாம் டைட்டில் வின் பண்ணக் கூடாது என்று சொன்ன பாலாவுக்கு ஏன் இப்படி சோம் முரட்டு முட்டு கொடுத்து வருகிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Recommended Video

சென்னை: பாட்டு பாடும் டாஸ்க்.. இவன் தந்திரன் பாலா: காண்டு ரசிகர்கள்.. கடைசியில் நடந்த டுவிஸ்ட்!
குறும்படம் போட்டு இருந்தால்

குறும்படம் போட்டு இருந்தால்

கமல்ஹாசன் கடந்த வாரம் ரியோ மற்றும் சோம் டைட்டில் ஜெயிக்கக் கூடாது என பேசிய காட்சிகளை குறும்படமாக போட்டிருந்தால், ரியோவும், சோமும் பாலா பக்கமே சென்று இருக்க மாட்டார்கள். ஆனால், பிக் பாஸ் டீம் அதை செய்யவில்லை. அப்போது தான் ஆரி மீதான எதிர்ப்பு தீ எரிந்து கொண்டே இருக்கும், டிஆர்பியில் இவர்கள் குளிர் காயலாம் என நெட்டிசன்கள் நறுக்கென குட்டி வருகின்றனர்.

ரம்யாவான ரியோ

ரம்யாவான ரியோ

சோமசேகர் ஆரியை பார்த்து நேராக நீ மற்றவர்களை குறை சொல்லியே விளையாடுகிறாய் என சொன்ன விஷயத்தையே அவரது கூட்டாளியான ரியோ ராஜும் பூசி மெழுகி பேசுகிறார். என்னடா திடீரென ரியோ ராஜ் ரம்யாவாகி சாஃப்ட் ஹர்ட் செய்கிறாரே என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

நன்றி சொன்ன ஆரி

நன்றி சொன்ன ஆரி

சோமசேகர் பேசும் போது இங்கே எல்லாரும், எல்லோர் பற்றியும் மற்றவர்களிடம் குறை சொல்லி உள்ளோம் என குறுக்கிட்டு சோமுக்கு நோஸ் கட் கொடுத்த ஆரி, ரியோ சாமர்த்தியமாக, இந்த ஒன்றை மட்டும் திருத்திக் கொண்டால், உங்களை அடிச்சிக்க ஆளில்லை என்று பேசியதற்கு நன்றி சொன்னார். அதிகளவிலான ரசிகர்களும் ஆரியை ரசிக்க காரணமும், மற்ற போட்டியாளர்களை விட ஆரி பெட்டர் என்பதால் மட்டுமே என்பது ஹவுஸ்மேட்களுக்கு வெளியே வந்தால் புரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X