தோத்துட்டேன் மச்சான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போனில் உரையாடிய சோமசேகர்.. வைரலாகும் வீடியோ!

சென்னை: பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்கு பிறகு வெளியேறிய சோமசேகர், "தோத்துட்டேன் மச்சான்" என நண்பரிடம் போனில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோம், அதன் பிறகு தனக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என நினைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியனான சோமசேகர் பிக் பாஸ் வீட்டில் பாசிட்டிவிட்டியையும் அன்பையும் பரப்பி ரசிகர்கள் மனங்களை வென்றார்.

10வது நபராக

10வது நபராக

பிக் பாஸ் வீட்டுக்குள் பத்தாவது போட்டியாளராக சோமசேகர் உள்ளே நுழைந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனக்கு அதன் பிறகு பெரிய அங்கீகாரம் ஏதும் கிடைக்கவில்லை, அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன் என்றார்.

பாக்ஸிங் சாம்பியன்

பாக்ஸிங் சாம்பியன்

MMA என அழைக்கப்படும் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் ஜாம்பவனான இவர், பிக் பாஸ் வீட்டுக்குள் அமைதியின் தூதுவராகவே இருந்து வந்தார். பாக்ஸிங் சாம்பியனான இவர் 66 கிலோ எடை பிரிவில் தங்க மெடல் வாங்கியவர். பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரி மற்றும் பாலாவுக்கு பாக்ஸிங்கின் அடிப்படையை கற்றுக் கொடுத்ததாக கமலிடம் கூறினார்.

உதயகிருஷ்ணா நெய்

உதயகிருஷ்ணா நெய்

அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சிக்கு பிறகு விளம்பர மாடலாக கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தார் சோமசேகர். உதயகிருஷ்ணா நெய் விளம்பரத்தில் லீடு ரோலில் நடித்து ஆடி பாடி மகிழும் சோமின் வீடியோவை எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் தேடி எடுத்து மீண்டும் வைரலாக்கினர்.

சூரரைப் போற்று படத்தில்

விளம்பர படங்களை தாண்டி சினிமாவில் துணை நடிகராகவும் நடித்து வந்தார் சோமசேகர். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூரரைப் போற்று படத்தில் விமானப் படை காவலராக ஒரு சில காட்சிகளில் சோமசேகர் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது. சீக்கிரமே பெரிய ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் பாஸ்!

திக்குவாய் பிரச்சனை

திக்குவாய் பிரச்சனை

சோமசேகரின் வெற்றிக்கு தடைக்கல்லாக இருந்தது தனது திக்குவாய் பிரச்சனை தான் என பிக் பாஸ் வீட்டில் அவர் பேசும் போது அதை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் செய்தனர். ஆனால், நீங்க பேசும் போது அதெல்லாம் தெரியவில்லை, அந்த தடையை கடந்து விட்டீர்கள் என கமல் சோமை பாராட்டிய வீக்கெண்ட் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இறுதி வரை போராட்டம்

இறுதி வரை போராட்டம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சோமசேகருக்கு டிக்கெட் டு ஃபினாலே கிடைத்தும், டைட்டில் மற்றும் ரன்னர் அப் கிடைக்காதது, அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தம் தான். ஆனால், 105 நாட்களும் பிக் பாஸ் வீட்டில் இருந்து இறுதி வரை போராடியது நிச்சயம் அவரது விடா முயற்சிக்கு சான்றாக உள்ளது.

Recommended Video

Bigg Boss Aari Arjunan தன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்
ரம்யாவுடன் ரொமான்ஸ்

ரம்யாவுடன் ரொமான்ஸ்

இன்னும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக இருக்கும் சோமசேகர், பிக் பாஸ் வீட்டில் ரம்யாவை ஒன்சைடாக ரொமான்ஸ் செய்தார். ரம்யா கொடுத்த சாக்லேட்டின் கவரை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, எவிக்ட் ஆனதும் அதை ரம்யாவுக்கு கொடுத்தார். ஆனால், சோம் கொடுத்த அந்த அன்பு பரிசுக்கு என்ன ரியாக்ட் செய்றதுன்னே தெரியல என ரம்யா அப்போதுமே ரொமான்ஸ் வலையில் விழாமல் தப்பித்தார்.

தோத்துட்டேன் மச்சான்

சோமசேகர் சாரா மற்றும் கேபியுடன் தனது வீட்டுக்கு செல்லும் வீடியோ வைரலான நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் செல்போனில் தனது நண்பரிடம் பேசிய சோமசேகர், "தோத்துட்டேன் மச்சான்" என சந்தோஷமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

என்ன மனுஷன்யா

என்ன மனுஷன்யா

வெற்றியோ, தோல்வியோ சோகத்தோடு எதிர்கொள்ளக் கூடாது, அப்செட்டாக இருக்கக் கூடாது என்பதை சோமை பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். டைட்டிலை மிஸ் பண்ணதை கூட பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு ஹேப்பியாக பேசும் சோமை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

குட்டாவுடன் கொஞ்சல்

பிக் பாஸ் வீட்டில் எப்போதுமே தான் அதிகம் மிஸ் செய்வது தனது குட்டாவைத் தான் என சோம் சொல்லுவார். இந்நிலையில், சோம் தனது செல்ல நாய்க்குட்டியான குட்டாவை வீட்டில் கொஞ்சி விளையாடும் இன்னொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X