வேட்டி சட்டையில் மாப்பிள்ளை மாதிரி ரெடியான பிக் பாஸ் பிரபலம்.. என்ன மேட்டருன்னு நீங்களே பாருங்க!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோமசேகர் விளம்பர படம் ஒன்றில் கமீட் ஆகியுள்ளார். அதற்கான படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான சோமசேகர் எம்.எம்.ஏ ஃபைட்டரும் கூட, ஆனால், பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளும் யாரிடமும் மல்லுக்கு நின்றதில்லை.

நல்ல பிள்ளை என பலரது பாராட்டுக்களை அள்ளிய சோமசேகர் கிராண்ட் ஃபினேலே வரை பிக் பாஸ் வீட்டில் இருந்து கெத்துக் காட்டினார்.

கோல்டு மெடல்

கோல்டு மெடல்

தமிழ்நாடு மாநில அளவிலான பாக்ஸிங் போட்டிகளில் கலந்து கொண்டு கலக்கிய சோமசேகர், 66 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு தங்க மெடல் ஜெயித்துள்ளார். மற்றொரு போட்டியில் வெள்ளி மெடலையும் வென்றுள்ள இவர், ஏகப்பட்ட விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

விளம்பர மாடல்

விளம்பர மாடல்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே விளம்பர மாடலாக இருந்தவர் தான் சோமசேகர். உதய கிருஷ்ணா நெய் விளம்பரம், டீ விளம்பரம் என ஏகப்பட்ட விளம்பர படங்களில் நடித்த இவருக்கு பிக் பாஸ் மேடை மிகப்பெரிய வரப் பிரசாதமாகவே அமைந்தது. நல்ல பிள்ளையாக மக்கள் மனதையும் வென்றுள்ளார்.

ரம்யாவுடன் ரொமான்ஸ்

ரம்யாவுடன் ரொமான்ஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியனுக்கும் இவருக்கும் ஒரு குட்டி லவ் டிராக் ஓடிக் கொண்டிருந்தது. பிக் பாஸ் வீட்டை விட்டு ரம்யாவுக்கு முன்பாக இவர் வெளியேறும் போது அது வரை பாதுகாப்பாக வைத்திருந்த சாக்லெட் கவரை கொடுக்க, ரம்யா பாண்டியன் என்ன சொல்வதென்றே தெரியாமல் சிரித்துக் கொண்டே அதை பெற்றுக் கொண்டார்.

மாப்பிள்ளை மாதிரி

மாப்பிள்ளை மாதிரி

இந்நிலையில், வேட்டி சட்டையில் மாப்பிள்ளை போல இருக்கும் சோமசேகரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. புதிதாக சோம் நடிக்க உள்ள விளம்பரப் படத்திற்காகத் தான் சோமசேகர் இப்படி ஒரு கெட்டப்பில் இருக்கிறார் என்பதை புகைப்படங்களை பார்த்ததும் புரிந்து கொள்ள முடிகிறது.

நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்

நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்

சமீபத்தில் பிக் பாஸ் பிரபலங்களுடன் தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக கேக் வெட்டி கொண்டாடினார் சோமசேகர். சில பிரபலங்களை தவிர ஒட்டுமொத்த பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்கள் அப்படியே குடும்பத்துடன் ஆஜராகி சோமசேகரை வாழ்த்தினர்.

சினிமா வாய்ப்பு

சினிமா வாய்ப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பிரபலங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. பாலாஜி முருகதாஸுக்கு சிலர் கதைகளை கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ரியோ ராஜ் தனது புதிய படமான பிளான் பண்ணி பண்ணனும் ரிலீசுக்கு காத்திருக்கிறார். அர்ச்சனா சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ரிலீசுக்கு காத்திருக்கிறார். சூரரைப் போற்று படத்தில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்திருந்த சோமசேகருக்கு விரைவில் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X