வாக்கியம் டாஸ்க்கில் யாருக்கு வெற்றி? மீண்டும் கடைசி இடத்தை ஆரிக்கு கொடுத்த ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: கடந்த இரண்டு நாட்களாக நடந்த வாக்கியம் டாஸ்க்கில் சோமசேகர் 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார்.
மைனஸ் இரண்டு புள்ளிகளை பெற்று பாலாவும், ஆரியும் இருந்த நிலையில், ஹவுஸ்மேட்கள் பாலாவை விடுத்து கடைசி இடத்தை மீண்டும் ஆரிக்கு கொடுத்தனர்.
ரியோவுக்கு ஒரே ஒரு சிகப்பு வாக்கியம் வந்ததற்கு மனுஷன் என்னம்மா குதிக்கிறார் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

பொங்கிய பாலா
என்னையும் ஆரி பிரதரையும் வில்லனா மாத்திட்டு, சிலர் அழகா சேஃப் கேம் விளையாடியே ஃபைனலுக்கு வந்துட்டாங்க என ரியோவை, சோம் மற்றும் ரம்யாவை வெளுத்து விட்டார் பாலாஜி முருகதாஸ். அதிகமாக ரெட் கார்டுகள் கிடைக்கப்பட்ட நிலையில், நிச்சயம் டிக்கெட் டு ஃபினாலே நமக்கு இல்லை என்று தெரிந்ததும் அப்படி பொங்கிவிட்டார்.

அடுத்த இடம் ஆரிக்கு
பாலாவை அடுத்து ஆரிக்கு அதிகளவிலான வாக்கியங்கள் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களால் கொடுக்கப்பட்டன. மந்திரம் சொல் என்கிற ஒரே ஒரு க்ரீன் கார்டு மட்டுமே ஆரிக்கு கொடுக்கப்பட்டது. ஒருத்தர் கொடுத்தால் அதையே வழிமொழியும் போக்குத்தான் சிலருக்கு 97 நாட்களாகியும் போகவில்லை.

சோம் தான் வின்னர்
ஞயம் பட உரை உள்ளிட்ட வாக்கியங்கள் சோமுக்குத்தான் கிடைத்தன. அதிக பச்சை வாக்கிய அட்டைகளை பெற்று, இந்த வீட்டிலேயே நீங்க ரொம்ப நல்லவன் என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் சோமுக்கு இந்த சுற்றில் முதலிடத்தை கொடுத்தனர். டிக்கெட் டு ஃபினாலேவையும் சோமசேகர் தான் வென்றார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. டைட்டில் வின்னராகவும் சோம் ஆவாரா? என்பது அடுத்த வாரம் தெரிந்து விடும்.

ஒரு ரெட் கார்டுக்கு
ஆரிக்கும், பாலாவுக்கும் வந்த ரெட் கார்டுகளுக்கு அவங்க கோபப்பட்டா ஒரு நியாயம் இருக்கு. ஆனால், சொல்வது தெளிந்து சொல் என ஒரே ஒரு ரெட் கார்டு கொடுத்து பாலா பேசிய பேச்சைக் கேட்ட ரியோ பயங்கரமாக அப்செட் ஆனது உலக மகா நடிப்புடா சாமி என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

கடைசி இடம் ஆரிக்கு
அதிக வாக்கியங்களை பாலாவும், அதற்கு அடுத்த இடத்தில் ஆரியும் இருந்த நிலையில், இருவருக்கும் மைனஸ் இரண்டு மதிப்பெண்களை பிக் பாஸ் வழங்கினார். இருவரில் யாரை கடைசி இடத்துக்கு தேர்வு செய்கிறீர் என ஹவுஸ்மேட்களை கேட்டால் என்ன சொல்வார்கள், வழக்கம்போல ஆரிக்கே கடைசி இடத்தை கொடுத்து விட்டனர்.

மக்களின் நம்பர் கேம்
தொடர்ந்து தனக்கு இந்த ஹவுஸ்மேட்கள் அநீதி இழைக்கின்றனர் என்பதை புரிந்து கொண்ட ஆரி, பாலாவிடம் இந்த நம்பர் கேமை கண்டு ஃபீல் பண்ணாத, வெளியே மக்கள் ஒரு நம்பர் கேம் விளையாடுவாங்க, அதுதான் முக்கியம். அதுதான் பிக் பாஸ் டைட்டிலை ஜெயிக்க வைக்கும் என ஆரி மீண்டும் மக்களின் கவனத்தை தனது பக்கம் திருப்பிக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











