Just In
- 1 hr ago
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்தவங்க என்ன சொன்னாங்க? கமலிடம் போட்டுடைத்த ஹவுஸ்மேட்ஸ்!
- 7 hrs ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
- 8 hrs ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
Don't Miss!
- News
விபரீதத்தில் முடிந்த பள்ளித் தோழிகளின் கோவா சுற்றுலா .. 11 பேர் பலி.. வைரலாகும் கடைசி செல்பி
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குறைவான ஓட்டு.. டிக்கெட் டு ஃபினாலே.. இரண்டுமே இவருக்குத்தானாம்.. அப்போ இந்த வாரம் வெளியேறப் போவது?
சென்னை: ஏற்கனவே எதிர்பார்த்தபடியே டிக்கெட் டு ஃபினாலேவை சோமசேகர் தான் வென்றுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும், இந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்று வெளியேறும் நிலையில், இருப்பதும் சோமசேகர் தானாம்.
அது எப்படி பிக் பாஸ், குறைவான ஓட்டுக்களை பெற்று 3வது வாரத்தில் வெளியேற வேண்டிய ஆஜீத்துக்கு எவிக்ஷன் ஃபிரீ பாஸ் கிடைத்தது. அதே போல, சோமசேகருக்கு இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே கிடைக்கிறது என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
சிங்கப்பெண்.. ஷிவானியா? ரம்யாவா? இரண்டு பேரும் இப்படி மாத்தி மாத்தி அடிச்சிக்கிறாங்களே.. புரமோ 3!

காணவில்லை
ஆரி சொன்னது போல இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காணவில்லை என்கிற போர்டு போட்டு போட்டியாளர்கள் தேடிய சோமசேகர், சைலன்டாக இருந்து கொண்டே கடைசி வரை வந்து விட்டார். அர்ச்சனா கேங்கில் சோம் இருந்த போது, உடம்பு முடியாத பேஷன்ட் போலவே செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடைசி வார கேப்டன்
இதுவரை சோமசேகர் ஒரு முறை கூட கேப்டன் டாஸ்க்கில் போட்டியிட்டு வெற்றி பெற்று கேப்டன் ஆகவில்லை. இந்த வாரம் மீண்டும் நல்லவன் பட்டம் பெற்ற சோமசேகருக்கு கடைசி வாரத்திற்கான கேப்டன் பதவியை கொடுப்பார்கள் என தெரிகிறது. அதே போல, சோம் ஒரு முறை கூட சிறைக்கும் சென்றதில்லை.

நெகட்டிவிட்டி இல்லை
பிக் பாஸ் வீட்டில் ஜித்தன் ரமேஷை போல எதையும் கண்டுக்காமல் இருந்த அடுத்த பிளேயர் சோமசேகர் தான். சோம் ஆடுவது சேஃப் கேம் என தெரிந்ததால் தான் அவரை பாலா வேர்க்கடலை சாப்பிடுறவன் ஃபைனலுக்கு போறான் என்றார். ஆனால், பாலாவை தவிர்த்து யாரிடமும் சோமுக்கு நெகட்டிவிட்டி இல்லை. ஆரியையும் மச்சானாக்கி தப்பித்துக் கொண்டார்.

டிக்கெட் டு ஃபினாலே இவருக்குத்தான்
இந்நிலையில், தற்போது கசிந்த தகவலின் படி டிக்கெட் டு ஃபினாலேவை தட்டிச் சென்றது சோமசேகர் தான். ரியோவும், சோமசேகரும் அதிக புள்ளிகளை பெற்று இருந்த நிலையில், வாக்கியம் டாஸ்க்கில் அதிக புள்ளிகளை பெற்று ரியோவை பின்னுக்குத்தள்ளி சோமசேகர் டிக்கெட் டு ஃபினாலேவை தனதாக்கிக் கொண்டார் என்கின்றனர்.

குறைவான ஓட்டுக்கள்
3வது வாரத்திலேயே ஓட்டுக்கள் குறைவாகி வெளியேற வேண்டிய நிலை ஆஜீத்துக்கு வந்தது. அவரை காப்பாற்ற எவிக்ஷன் ஃப்ரீ பாஸை அறிமுகப்படுத்தினர். ரம்யா பாண்டியன், ஆஜீத்துக்காக போராடி அதை அவருக்கு விட்டுக் கொடுத்தார். சம்யுக்தா வெளியேறும் போது டாப்புள் கார்டு வந்தது, அனிதா அவருக்கு பதிலாக சம்யுக்தாவை வெளியேற்றினார். இந்நிலையில், இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றுள்ள சோமசேகருக்கே டிக்கெட் டு ஃபினாலே கிடைக்கிறது. ஆனால், பிக் பாஸ் ஸ்க்ரிப்ட் இல்லை என்று சொல்வது சிரிப்பைத் தான் வரவழைக்கிறது.

பலியாடு ஷிவானி
ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி நாராயணன் குறைவான ஓட்டுக்களுடன் டேஞ்சர் ஸோனில் உள்ளனர் என ஏற்கனவே தகவல்கள் கசிந்து இருந்தன. இந்நிலையில், இந்த வாரம் வெளியேற வேண்டிய சோமசேகருக்கு டிக்கெட் டு ஃபினாலே கிடைத்த நிலையில், ஷிவானி நாராயணனை வெளியேற்றப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சிங்கப்பெண் ஷிவானிக்கு குட்பை சொல்ல வேண்டியது தான் போல!