twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பாவின் சினிமா கனவை நிறைவேற்ற மகன் எடுக்கும் படம் 'அரளி'!

    தந்தையை கதாநாயகனாக்கி அரளி என்ற படத்தை தயாரித்து இயக்குகி வருகிறார் அறிமுக இயக்குநர் சுப்பாராஜ்.

    |

    Recommended Video

    அப்பாவின் சினிமா கனவை நிறைவேற்ற மகன் எடுக்கும் படம் அரளி!- வீடியோ

    சென்னை: தந்தையின் சினிமாக் கனவை நிறைவேற்றும் முயற்சியாக, அரளி என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார் அறிமுக இயக்குநர் சுப்பாராஜ்.

    மகன் அல்லது மகளின் சினிமா கனவை நிறைவேற்றுவதற்காக தந்தை தயாரிப்பாளராகவோ, இயக்குநராகவோ மாறுவது அடிக்கடி நாம் கேள்விப்படும் விசயம் தான். ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு, தன் தந்தை அருணாச்சலத்திற்காக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார் சுப்பாராஜ்.

    Son directs film for his fathers desire

    தன் தந்தையின் நிறைவேறாத சினிமா கனவை நிறைவேற்ற, அவரைக் கதையின் நாயகனாக வைத்து அரளி என்ற பெயரில் படம் ஒன்றை இவர் தயாரித்துள்ளார். பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை நல்லவனாக வளர்வதற்கும், தவறான பாதையில் செல்வதற்கும் காரணம் எனும் கருத்தை மையமாக கொண்டு நகர்கிறது அரளி.

    இப்படத்தில் நாயகனாக ​மதுசூதன், நாயகியாக மஞ்சுளா​ ரதோட்​ ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், காளிதாஸ், அமிர்தலிங்கம், கோவை செந்தில் , சைக்கிள் மணி, ராஜ் கிருஷ்ணா​ ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இப்படத்திற்கு ராஜேஷ் ஒளிப்பதிவு செய்ய, கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார் சுப்பாராஜ்.

    இந்நிலையில், பெற்றோரை போற்றுவோம் என்ற கருத்தை வலியுறுத்தி சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரை சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார் சுப்பாராஜ். இதன் தொடக்க விழாவில், நடிகர்கள் ராதாரவி, கரிகாலன், எடிட்டர் மோகன், கதாசிரியர் ஆரூர் தாஸ் மற்றும் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்துகொண்டு சைக்கிள் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    அப்போது பேசிய ராதாரவி, "நான் விரைவில் ஒரு படம் தயாரிக்க உள்ளேன். அதை சுப்பாராஜ் தான் இயக்குவார்" என உறுதியளித்தார்.

    English summary
    The upcoming tamil movie Arali's director Subbaraj has started a cycle campaign with the slogan 'praise the parents', for the movie's promotion.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X