அப்பா, அப்பா...: உருக்கமான வீடியோ வெளியிட்ட மகேந்திரனின் மகன்
சென்னை: தனது அப்பா நினைவில் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஜான் மகேந்திரன்.
உடல்நலக் குறைவு காரணமாக இயக்குநர் மகேந்திரன் காலமானார். அவரது உடல் மந்தைவெளியில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. யதார்த்த சினிமாவுக்கு பெயர் போன மகேந்திரனின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
இந்நிலையில் தந்தையை இழந்து வாடும் இயக்குநர் ஜான் மகேந்திரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோ
தனது தந்தை மகேந்திரன் நினைவாக அவரின் புகைப்படங்கள் சிலவற்றை தொகுத்து ஒரு வீடியோவாக்கி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஜான்.
கோரிக்கை
ஜான் மகேந்திரன் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்படி ஒரு அன்பு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ரஜினி
அவர் இறந்துவிட்டார் என்று இன்னும் நம்ப முடியவில்லை. நீங்க நம்ம மகேந்திரன் சார் ஸ்டைலில் ஒரு ரஜினி படம் பண்ணுங்க சார் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெயர்
மகேந்திரன் இறக்கவில்லை, சினிமா உள்ள வரை அவரின் பெயர் நிலைத்து நிற்கும். அவர் தன் படங்களின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











