»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை தேவயானியை அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டதில் எனக்கு வருத்தம்தானுங்க என டைரக்டர்ராஜ்குமாரன் தாயார் அய்யம்மாள் கவலையுடன் கூறினார்.

அன்மையில் அதிகாலையில் சேவலை எழுப்பி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிதேவயானி-ராஜ்குமாரன்.

ராஜ்குமாரன் தனது மனைவியுடன் தாயாரைக் காண அந்தியூர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர்,அவர்கள் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆசி பெற திட்டமிட்டுள்ளனர்.

தனது மகனின் திருமணத்தை கண்குளிரக் காணக் கொடுத்து வைக்காத அவரது தாயாருக்கு போலீசார் சொல்லித்தான் தெரியுமாம். மகளைக் காணவில்லை என தேவயானியின் தாயார் புகார் கூறியதையடுத்து அந்தியூர்போலீசார் ராஜகுமாரனின் அம்மாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் அம்மாவுக்கு விஷயமேதெரிய வந்துள்ளது.

அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையத்தில் பலகாரக் கடை வைத்து வியாபாரம் செய்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார் ராஜகுமாரனின் தாயார் அய்யம்மாள். அவரது தந்தை 16 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துதனியாகச் சென்று விட்டார். ராஜகுமாரனையும் தம்பி பழனிச்சாமியையும் தாயார் வளர்த்து ஆளாக்கியுள்ளார்.தம்பி பழனிச்சாமி, லாரி கிளீனராக இருந்து வருகிறார்.

சினிமா ஆர்வத்தில் சென்னை சென்ற ராஜகுமாரன், தனது திறமையால் இப்போது டைரக்டராகி படங்களைஇயக்கிக் கொண்டிருக்கிறார். தாயார் அய்யம்மாள், நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ராஜகுமாரன் ஆண்டுக்கு இரு முறை வீட்டுக்கு வருவான். டெலிபோனில் அடிக்கடி பேசுவான். என்மீது பாசம்கொண்டிருந்தாலும், திருமணம் பற்றி சொல்லவே இல்லை. போலீஸ் மூலம் தான் அவனது திருமணம் பற்றிதெரிந்து கொண்டேன்.

கடந்த சில வாரங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியபோது, அவன் இன்னும் இரண்டுபடங்களை முடித்து விட்டு பார்த்துக் கொள்ளலாம் என்றான். நான் ராஜகுமாரனின் படங்களைப் பார்க்கவில்லைஎன்றாலும், பார்த்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஆனால், அவன் அவசரப்பட்டு இப்போது கல்யாணம் பண்ணிக் கொண்டது எனக்கு வருத்தம்தானுங்க.

தேவயானியை நான் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன். அப்போது தேவயானி என்னிடம், "என்னஎங்க டைரக்டருக்கு பொண்ணு பார்க்கறீங்களாமே, என்னிடம் போட்டோ கொடுங்கள், பார்க்கிறேன் னுசொல்லிச்சு. போட்டோ இல்லை எனக் சொன்னேன். அப்போதே ரெண்டுபேரும் காதலிச்சது இப்போதான்தெரியுது என்றார் அய்யம்மாள்.

Read more about: devyani, mother, rajakumaran, urgent
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil