இப்போல்லாம் குடிக்கறதே இல்லீங்க.. நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு.. பிரபல நடிகையின் திடீர் அறிக்கை!

சென்னை: குடிப்பதை நிறுத்திவிட்டதாக நடிகை சோனா தெரிவித்திருக்கிறார்.

நடிகை சோனா மிருகம், குசேலன் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார். சினிமா தயாரிப்பதாக கோதாவில் குதித்த அவர் பெரும் சிக்கலுக்கு ஆளானார்.

பெரிய இடத்து வாரிசுடன் கிசுகிசுக்கப்பட்ட அவர், பல சர்ச்சைகளில் சிக்கினார். சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார் சோனா.

கடைசியாக

கடைசியாக

இந்நிலையில் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு நடிகர் பிரசாந்துடன் இணைந்து ஜானி படத்தில் நடித்திருந்தேன். அதன்பின் நான் நிறைய படங்களில் நடிக்கவில்லை.

கேள்வி எழுப்புகின்றனர்

கேள்வி எழுப்புகின்றனர்

இதனால் என்னைப்பற்றி பலவிதமாக பலரும் பேசினர். சிலர் என்னைத் திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

12 படங்கள்..

12 படங்கள்..

இந்த வருடத்தில் 4 படங்களில் நடித்திருக்கிறேன். 12 படங்களை நிராகரித்திருக்கிறேன்.நிம்மதியான நிலையை அடைய வேண்டும் என்று பயணித்து வருகிறேன். பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமில்லை.

குடிப்பதை நிறுத்திவிட்டேன்

குடிப்பதை நிறுத்திவிட்டேன்

முன்பு இருந்தது போல் இல்லாமல் இப்போது முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். குடிப்பதை முழுமையாக நிறுத்தி விட்டேன்.

நல்ல கதாப்பாத்திரங்கள்

நல்ல கதாப்பாத்திரங்கள்

2020-ம் ஆண்டு நல்ல கதாபாத்திரங்கள் அமையும் என்று நம்புகிறேன். இந்த வருடம் நான் சேஸிங், பரமபதம் விளையாட்டு, அசால்ட், தேடுதல், பச்ச மாங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறேன். நல்ல படங்களில் நடித்தால் மட்டும் போதும் என்ற மனநிலையில் இருக்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X