தொடையில் கை போட்டார், ரூமுக்கு வரச் சொன்னார்: பாடகர் மீது பாடகி புகார்
மும்பை: பிரபல பாடகர் கைலாஷ் கேர் மீது பாடகி சோனா மொஹபத்ரா பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
தனுஸ்ரீ தத்தா நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து பல பிரபலங்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல பாடகியான சோனா மொஹபத்ராவும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறியுள்ளார்.
கைலாஷ் கேர்
எங்களின் இசை குழுக்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி குறித்து பேச ப்ரித்வி கஃபேவில் கைலாஷை சந்தித்தேன். அப்போது அவர் என் தொடையில் கையை வைத்து நீ அழகாக இருக்கிறாய். நல்ல வேளை ஒரு நடிகர் அல்லாமல் இசைக் கலைஞருக்கு நீ கிடைத்துள்ளாய் என்றார். அதன் பிறகு நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன் என்று ட்வீட்டியுள்ளார் சோனா.
தொல்லை
அத்துடன் கைலாஷ் கேர் நிறுத்திக் கொள்ளவில்லை. தாக்கா சென்ற பிறகு எனக்கு தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்தார். நான் அவரின் செல்போன் அழைப்பை எடுக்காததையடுத்து அவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் போனில் அழைத்து சவுண்டு செக்கிற்கு போகாமல் அவரின் அறைக்கு வருமாறு கூறினார் என்கிறார் சோனா மொஹபத்ரா.
மன்னிப்பு
கைலாஷ் கேர் தன்னிடம் தவறாக நடந்ததாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்திற்காக கேர் மன்னிப்பு கேட்டுள்ளார். இதை பார்த்த சோனா எத்தனை பெண்களிடம் மன்னிப்பு கேட்பீர்கள் கைலாஷ் கேர்? உடனே துவங்குங்கள். வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தனுஸ்ரீ
பாலிவுட்டில் இந்த மீ டூ இயக்கத்தை துவங்கி வைத்த தனுஸ்ரீ தத்தா நானா படகேர் விவகாரம் தொடர்பாக மும்பை போலீசார் முன்பு ஆஜராகி 6 மணிநேரம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து நானா படேகர், டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா உள்ளிட்டோர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











