பிகினியில் பிறந்தநாள் கொண்டாடிய அமீர்கான் மகள்.. ட்ரோல் செய்த நெட்டிசன்களை விளாசிய பிரபல பாடகி!

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கானின் மகள் இரா கான் பிகினியில் தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியான நிலையில், அதிகளவில் நெட்டிசன்களால் அவர் ட்ரோல் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிரபல பின்னணி பாடகி மற்றும் பெண் இசையமைப்பாளரான சோனா மொகபத்திரா இரா கானுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை வெளியிட்டு ட்ரோல் செய்த நெட்டிசன்களை விளாசி உள்ளார்.

நடிகர் அமீர்கானின் முதல் மனைவி ரீனா தத்தாவுக்கு மகளாக பிறந்தவர் இரா கான் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீர்கான் மகள் பிறந்தநாள்

அமீர்கான் மகள் பிறந்தநாள்

நடிகர் அமீர் கானுக்கும் அவரது முதல் மனைவி ரீனா தத்தாவுக்கும் பிறந்தவர் தான் இரா கான். தனது 25வது பிறந்தநாளை முன்னிட்டு நீச்சல் குளத்தில் குளித்தபடியே வெளியே வந்து பிகினி உடையுடன் அவர் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவியது.

காதலருடன் பிகினி பார்ட்டி

காதலருடன் பிகினி பார்ட்டி

மேலும், தனது காதலர் நுபுர் சிக்காரே மற்றும் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து குளித்தபடி கும்மாளம் போட்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு டிரெண்ட் செய்தார் இரா கான். பிறந்தநாள் கொண்டாட்டத்தை பிகினி உடையில் அவர் கொண்டாடிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து கமெண்ட்டுகளை பதிவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அப்பாவுக்கு முன்னாடியேவா

அப்பாவுக்கு முன்னாடியேவா

நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மகன் மேல் சட்டை எதுவும் அணியாமல் அப்படியே அரை டவுசர் உடன் நிற்க அப்பாவுக்கு முன்னாடியே பிகினி உடையில் இரா கான் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இப்படியா அரையும் குறையுமாக பிறந்தநாள் கொண்டாவீங்க என்று பயங்கரமாக ட்ரோல் செய்தனர்.

பர்மிஷன் வாங்கத் தேவையில்லை

பர்மிஷன் வாங்கத் தேவையில்லை

அமீர்கான் மகள் இரா கானின் பிறந்தநாள் புகைப்படங்கள் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், பிரபல பாலிவுட் பாடகி மற்றும் இசையமைப்பாளரான சோனா மொகபத்ரா அவளுக்கு 25 வயசாகுது. அவங்க அப்பா அமீர்கான் பர்மிஷன் மட்டுமில்ல, யாருடைய அனுமதியையும் அவள் வாங்கத் தேவையில்லை. அவளுக்கு பிடித்த உடையை அணிந்து கொண்டு பிறந்தநாளை கொண்டாட முழு உரிமையும் இருக்கு என ட்ரோல் செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X