twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்கள் மது வாங்குவது பற்றி கிண்டல் கருத்து.. 'குடிக்கக் கூடாதா?' சர்ச்சை இயக்குனரை விளாசிய பாடகி!

    By
    |

    சென்னை: பெண்கள் மதுபானம் வாங்குவது பற்றி கிண்டலாகக் குறிப்பிட்ட சர்ச்சை இயக்குனரை விளாசியுள்ளார் பிரபல பாடகி.

    பிரபல இந்திப் பட இயக்குனர் ராம் கோபால் வர்மா. பல தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார்.

    சில வருடங்களுக்கு முன் சூர்யா நடிப்பில் ரத்த சரித்திரா என்ற இந்தி படத்தை எடுத்தார். இந்த படம் தமிழிலும் வெளியானது.

    படுக்கையறையில் காதலருடன் அலங்கோலமாய் பூனம் பாண்டே.. இதுல ஃபீலிங்ஸ் வேற.. தீயாய் பரவும் போட்டோ!படுக்கையறையில் காதலருடன் அலங்கோலமாய் பூனம் பாண்டே.. இதுல ஃபீலிங்ஸ் வேற.. தீயாய் பரவும் போட்டோ!

    பாலியல் வன்கொடுமை

    பாலியல் வன்கொடுமை

    உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து படமாக்கி வரும் இவர், அடுத்து, திஷா பாலியல் வன்கொடுமை விவகாரத்தை படமாக்க இருக்கிறார். இதுபற்றி அவர் 'எனது அடுத்த படம், 'திஷா'. கொடூரமான திஷா பாலியல் வன்கொடுமை பற்றியது. நிர்பயா பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு நடந்த கொடூரமான கொலை இது. அதன் பின்னணி பற்றி எனது படம் விரிவாக பேசும்' என்று தெரிவித்திருந்தார்.

    கொரோனா

    கொரோனா

    அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் வர்மா, அதற்காக ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வார். கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் குறித்து தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையாகி இருந்தது. இந்நிலையில் இப்போது பெண்கள் மதுகுடிப்பதை பற்றி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

    லாக்டவுன் நீட்டிப்பு

    லாக்டவுன் நீட்டிப்பு

    கொரொனாவுக்காக விதிக்கப்பட்டுள்ள லாக்டவுன், வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் தொடர்ந்து முடங்கிக் கிடக்கின்றனர். இதற்கிடையே, நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகளை திறந்துகொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    மதுபானக் கடைகள்

    மதுபானக் கடைகள்

    இந்நிலையில் டெல்லி, கர்நாடகா, ஆந்திர உட்பட சில மாநிலங்களில் மதுபானக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டது. இதையடுத்து, மதுபானக் கடைகளின் முன்பு ஆயிரக்கணக் கானவர்கள் கூடினர். சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளியையும் அவர்கள் கடைபிடிக்கவில்லை.

    யார் நிற்கிறார்கள்?

    யார் நிற்கிறார்கள்?

    இந்நிலையில், ராம்கோபால் வர்மா தனது ட்விட்டரில், பெண்கள் மது வாங்க வரிசையில் காத்திருக்கும் போட்டோவை பதிவிட்டு, கருத்து தெரிவித்துள்ளார். அதில், மதுபானக் கடையில் யார் நிற்கிறார்கள் என்று பாருங்கள்? குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் என்று இப்போதும் பேசி வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

    உரிமை இருக்கிறது

    உரிமை இருக்கிறது

    இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் பாடகி சோனா மொகபத்ரா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, 'ஆண்களை போலவே, பெண்களுக்கும் மதுபானம் வாங்கவும் குடிக்கவும் உரிமை இருக்கிறது. ஆனால், குடித்துவிட்டு வன்முறையில் இறங்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    ‘So much for protecting them against drunk men,’ says Ram Gopal Verma on women buying liquor, draws Sona Mohapatra’s ire
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X