»   »  'சோக்காலி' சோனாவின் கவர்ச்சிக் காட்சிகள் நீக்கம்!

'சோக்காலி' சோனாவின் கவர்ச்சிக் காட்சிகள் நீக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sona's adult scenes removed from Sokkali
சோக்காலி படத்திலிருந்து நடிகை சோனாவின் கவர்ச்சியான காட்சிகளை தணிக்கைக் குழு வெட்டி வீசிவிட்டது.

சோக்காலி படத்தில் நடிகை சோனா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகர்களாக சைதன்யா, ஜெயராம் ஆகியோரும் நாயகிகளாக ரீத்து, சுவாசிகாவும் நடிக்கின்றனர். இப்படத்தை சரணா இயக்குகிறார்.

சோனாவின் குடும்பத்தில் ஒருவர் ஏமாற்றப்படுவதும், இதற்காக சோனா பழி வாங்குவதுமே கதை. இப்படத்தில் சோனா கவர்ச்சியாக நடித்துள்ளார். அரை குறை ஆடையில் மயக்கி பழி தீர்ப்பதாகக் கதை போகிறது. படுக்கையறைக் காட்சிகள் எல்லாம் உண்டாம்.

நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியொன்றில் கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணமாக நடித்துள்ளாராம் சோனா. இதைப் பார்த்து அதிர்ந்த தணிக்கைக் குழுவினர் அந்த காட்சிகள் அனைத்துக்கும் கத்தரி போட்டனர்.

சோனாவுடன் நிஷா என்ற கவர்ச்சி நடிகையும் கிளுகிளு ஆட்டம் போட்டுள்ளாராம் படத்தில்.

இதுகுறித்து இயக்குநர் சரணா கூறுகையில், "சோனா நீச்சல் உடையில் தோன்றும் காட்சியில் சில சீன்களுக்கு தணிக்கை குழுவினர் ஆட்சேபம் தெரிவித்தனர். சில காட்சிகளை நீக்கி விட்டு சான்றிதழ் அளித்தனர். படம் சிறப்பாக வந்துள்ளது. வெட்டப்பட்ட காட்சிகள் தவிர, மேலும் நிறைய கவர்ச்சிக் காட்சிகள் உள்ளன," என்றார்.

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்துள்ளார். மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

English summary
The regional Censor board was removed few scenes of Actress Sona from Sokkali.
Please Wait while comments are loading...