ரஜினியுடன் சோனாக்ஷியின் முதல் ஷெட்யூல் முடிந்தது... அடுத்த டூயட் ஹைதராபாதில்!
லிங்கா படத்தின் முதல் ஷெட்யூலில் தன் பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துக் கொண்டு மும்பை திரும்பினார் நடிகை சோனாக்ஷி.
அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்கும்போது மீண்டும் அவர் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

1940கள் பின்னணி
இந்த முதல் கட்டப்படப்பிடிப்பு முழுவதும் மைசூர் அரண்மனை மற்றும் மேல்காட்டில் நடந்தது. அதில் 1940 களில் வரும் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி நடிக்கிறார்.

மும்பை ரிடர்ன்
ரஜினி - சோனாக்ஷி இடம் பெறும் பாடல் காட்சி மற்றும் சில முக்கிய காட்சிகள் கடந்த ஒரு வாரமாக படமாக்கப்பட்டன. தன்னுடைய பகுதி காட்சிகள் முடிந்ததும், மும்பை திரும்பினார் சோனாக்ஷி.

அருமையான குழு
இதுகுறித்து அவர் தனது ட்விட்டில், 'எனது முதல் தமிழ்ப் படமான லிங்காவில் எனது பகுதிக்கான முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்தது. என்ன ஒரு அருமையான குழு! ஏதோ என் வீட்டிலிருந்தது போல உணர வைத்தார்கள்...," என்று குறிப்பிட்டுள்ளார்.

அனுஷ்கா
லிங்கா படக்குழு, மேலும் சில வாரங்கள் மைசூரில் தங்கி படப்பிடிப்பைத் தொடர்கிறார்கள். இதில் ரஜினி, அனுஷ்கா, ஜெகபதிபாபு வரும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இளவயது ரஜினியின் வில்லத்தனமான காட்சிகள் இனி படமாக உள்ளன.

ஹைதராபாதில்...
ஹைதராபாதில் படமாகும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ரஜினி - சோனாக்ஷியின் இன்னொரு டூயட் மற்றும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.


Click it and Unblock the Notifications











