twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நண்பர் மகளுடன் டூயட் பாட நான்தான் வெட்கப்படணும்!- சோனாக்ஷியிடம் சொன்ன ரஜினி

    By Shankar
    |

    நண்பர் மகளுடன் டூயட் பாடி நடிக்க வேண்டியிருக்கிறதே என்பதற்காக நான்தான் வெட்கப்பட வேண்டும், என்று சோனாக்ஷியிடம் கூறினாராம் ரஜினிகாந்த்.

    ரஜினிகாந்தின் ‘லிங்கா' படம் அவரது பிறந்த நாளான வருகிற 12-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தியில் உலகமெங்கும் 5000 அரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. ரஜினிகாந்த் ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி நடித்து உள்ளனர்.

    ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை சோனாக்ஷி கூறுகையில், "எனது முதல் தென்னிந்தியப் படமாக சூப்பர் ஸ்டார் ரஜினி படமே அமைந்தது மகிழ்ச்சியைத் தருகிறது. எனது தன்னம்பிக்கைதான் இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்தது.

    ரஜினிகாந்த் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததும் எனது அப்பா சத்ருகன் சின்கா மிகுந்த சந்தோஷம் அடைந்தார். ரஜினிகாந்தும் எனது அப்பாவும் சிறந்த நண்பர்கள். இருவரும் இந்தியில் அஸ்லி-நக்லி படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படம் ரிலீசான ஒரு வருடத்தில்தான் நான் பிறந்தேன்.

    ரஜினியுடன் நான் நடிக்கிறேன் என்றதும் எனது அப்பா அவரைப் புகழ்ந்து தள்ளினார். ரஜினிகாந்த் கடுமையான உழைப்பாளி, எளிமையானவர், கட்டுப்பாடுமிக்கவர், பக்திமான் என்று அடுக்கிக்கொண்டே போனார். உங்கள் நண்பர் ஆச்சே? எப்படி விட்டு கொடுப்பீர்கள்? என்று நான்கூட கேலியாக பேசினேன்.

    ஆனால் அவருடன் நடித்தபோது தான் ரஜினி பற்றி அப்பா கூறியது எவ்வளவு உண்மையானது என்பது புரிந்து கொண்டேன். அவரிடம் ரசிகர்கள் அன்பு மட்டும் காட்டாமல் பைத்தியமாக இருப்பது ஏன்? என்பது புரிந்தது.

    படப்பிடிப்பு முடிந்ததுமே அனைத்து ஹீரோக்களும் உடனடியாக சென்று விடுவார்கள். ஆனால் ரஜினிகாந்த் அவர்களுடன் அமர்ந்து பேசி, அவர்களை பாராட்டியதும், நலன் விசாரித்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரைப் பற்றி அப்பா சொன்னது கொஞ்சம்தான் என தெரிந்தது.

    ரஜினியுடன் நடிக்கும் போது முதலில் எனக்கு வெட்கமாக இருந்தது. ரஜினிதான் எனக்கு உற்சாகமூட்டினார். எனது நண்பர் மகளுடன் காதல் காட்சியில் நடிக்க நான்தான் வெட்கப்பட வேண்டும். நீ வெட்கப்படுகிறாயே எனக் கூறி என்னை சகஜ நிலைக்கு கொண்டுவந்தார்.

    என்னை பாலிவுட் நடிகை என்கிறார்கள். ஆனால் லிங்கா படத்தில் நான் தென்னிந்திய நடிகையாகவே மாறி இருப்பதை நீங்கப் பார்ப்பீர்கள்.

    ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஷூட்டிங் எடுத்தார்கள். எனக்கு மொழி தெரியாததால் அதனை புரிந்து நடிப்பதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டது. .

    எனது நடிப்பை ரஜினிகாந்த் அணு அணுவாக பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

    லிங்கா படத்தில் 1940-ம் ஆண்டு நடக்கும் கதையின் கதாநாயகி என்பதால் ஜாக்கெட் இல்லாமல் என்னை நடிக்க சொன்னார்கள். 70 ஆண்டுகளுக்கு முந்தைய பெண் என்பதால் ஜாக்கெட் இல்லாமல் நடித்தேன். நீச்சல் உடையில் கூட நடித்து விடலாம். ஆனால் ஜாக்கெட் இல்லாமல் நடித்தது வெட்கமாக இருந்தது. அப்புறம் பழகி விட்டது.

    அந்த வேடத்தில் எனக்கு பேச்சு குறைவு. கண்களாலே பேசி நடிக்க வேண்டும். இதனை ஒரு சவாலாக செய்து முடித்தேன். லிங்காவுக்குப் பிறகு தென்னிந்தியாவில் நானும் ஒரு நிரந்தர இடம் பெறுவேன்," என்றார்.

    English summary
    Actress Sonakshi Sinha remembered her experience with Rajinikanth in Lingaa.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X