திருமணமாகி 6 நாள் தான் ஆச்சு.. ஹனிமூன் போகாமல் மருத்துவமனை வந்த நடிகை.. காரணம் என்ன?
சென்னை: பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு கடந்த ஆறு நாட்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் இன்று அவர் தனது கணவரோடு மருத்துவமனைக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து, அவர் கர்ப்ப பரிசோதனைக்காக வந்தாரா? என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாலிவுட்டின் முக்கிய நடிகையான சோனாக்ஷி சின்ஹா, நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் தமிழிலும் லிங்கா படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமான மாறினார். இவர், சல்மான் கானுக்கு ஜோடியாக 2010 ஆம் ஆண்டு வெளியான தபாங் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, தபாங் படத்தின் மற்ற இரண்டு பாகங்களிலும் சல்மான் கானுடன் நடித்திருந்தார்.

சோனாக்ஷி சின்ஹா: இவர் ஜாகீர் இக்பாலை கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் 2022ஆம் ஆண்டு டபுள் எக்ஸ்எல் திரைப்படத்தில் சேர்ந்து நடித்தபோது காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன் 2020ம் ஆண்டில் இருந்தே இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனர். படவிழாக்கள், பொது நிகழ்வுகளில் இருவரும் பல இடங்களில் சுற்றி திரிந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானது.
காதல் திருமணம்: பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் ஜாகிர் இக்பால் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின், சோனாக்ஷி இஸ்லாம் மதத்திற்கு மாறிவிடுவார் என பரவிய வதந்தி குறித்து பேசிய ஜாஹீரின் தந்தை, அவர் மதம் மாறவில்லை, அது நிச்சயம் நடக்காது. அவர்களுடையது இதயங்களின் ஒன்றான பின் மதத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறியிருந்தார்.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா: இந்நிலையில், நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது கணவருடன் காரில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. திருமணமான 6 நாட்களில் மருத்துவமனை விசிட்டை ரகசியமாக சோனாக்ஷி சின்ஹா வைத்திருந்தார். ஆனால் அதை எப்படியோ தெரிந்து கொண்ட பத்திரிகையாளர்கள் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து காரில் செல்லும் வீடியோவை எடுத்து வைரலாக்கி விட்டனர். இணையத்தில் பரவும் இந்த வீடியோவால் அவர், கர்ப்ப பரிசோதனைக்காக வந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











