»   »  வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?

வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் பற்றி வெளியான செய்திகள் குறித்து நடிகை சோனாக்ஷி சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும், அவரின் மேனேஜராக இருந்த பன்ட்டி சஜ்தாவும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. இதை சோனாக்ஷி மைக் வைக்காத குறையாக கூறி மறுத்தாலும் அவரை நம்ப யாரும் தயாராக இல்லை.

Sonakshi Sinha BREAKS SILENCE on engagement with Bunty Sajdeh

இந்நிலையில் சோனாக்ஷிக்கும், பன்ட்டிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகக் கூட செய்திகள் வெளியாகின. அதையும் சோனா மறுத்தார். சோனாவுக்கும், பன்ட்டிக்கும் விரைவில் நிச்சியதார்த்தம், நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு திருமணம் என்று செய்திகள் வெளியாகின.

சோனாவை திருமணம் செய்து கொள்ளுமாறு பெற்றோர் கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்பட்டது. இது குறித்து சோனாக்ஷி தற்போது கூறியிருப்பதாவது,

சொல்வதற்கு எதுவும் இல்லை. ஏதாவது இருந்தால் தானே சொல்வதற்கு. தற்போதைக்கு திருமணம் இல்லை. என் பெற்றோர் என்னை நிர்பந்திக்கவில்லை. நான் தயாரானால் நடக்கும் என்றார்.

English summary
Bollywood actress Sonakshi Sinha has cleared the air about her engagement with alleged beau Bunty Sajdeh.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil