இப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை!

By

மும்பை: சொந்த உழைப்பில் வீடு வாங்க வேண்டும் என்ற கனவை, பிரபல நடிகை இப்போது நிறைவேற்றி இருக்கிறார்.

பிரபல இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்‌ஷி. இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்திருந்தார்.

ட்விட்டரில் விலகல்

ட்விட்டரில் விலகல்

சல்மான் கானின் தபாங் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் சோனாக்‌ஷி. பாலிவுட்டில் நெபோடிசம் பற்றிய பேச்சு எழுந்தபோது, இவருடைய சமூக வலைதளப் பக்கங்களுக்கு சென்று ரசிகர்கள் சரமாரியாக அவதூறானக் கருத்துக்களை வெளியிட்டனர். இதனால், இவர் ட்விட்டரில் இருந்து விலகினார்.

புதிய வீடு

புதிய வீடு

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சோனாக்‌ஷி, சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்தார். அங்கு ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்றார். இதற்கான சான்றிதழைப் பெற்றிருந்த அவர், அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில் அவர் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

நான்கு பெட்ரூம் வீடு

நான்கு பெட்ரூம் வீடு

மும்பை பாந்த்ராவில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நான்கு பெட்ரூம் கொண்ட வீட்டை வாங்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோது, சொந்த வருமானத்தில் வீடு ஒன்றை
வாங்க வேண்டும் என்று நினைத்தேன். இது என் கனவு.

நனவாக்கி விட்டேன்

நனவாக்கி விட்டேன்

முப்பது வயதுக்குள் வாங்க வேண்டும் என நினைத்தேன். அது சில வருடங்கள் முன்னே பின்னே ஆகியிருக்கலாம். ஆனாலும் என் கனவை இப்போது நனவாக்கி விட்டேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது பெற்றோருடன் ஜூஹூவில் வசித்து வருகிறேன். அங்குதான் தொடர்ந்து இருப்பேன். இதை முதலீட்டுக்காக வாங்கி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

வீடுகளாக வாங்கி

வீடுகளாக வாங்கி

சமீபகாலமாக, பாலிவுட் நடிகர், நடிகைகள் வீடுகளாக வாங்கி வருகின்றனர். ஹிருத்திக் ரோஷன் பல கோடி ரூபாய்க்கு வீடு ஒன்றை சமீபத்தில் வாங்கி இருந்தார். அடுத்து நடிகை ஆலியா பட் ரூ.32 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கினார். பின்னர் ஜான்வி கபூரும் வாங்கி இருந்தார். இப்போது சோனாக்‌ஷியும் வாங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X