அன்று 'அஸ்லி நக்லி'யில் ரஜினியுடன் பேபியாக.. இன்று அழகு ஜோடியாக.... 'திரில்'லில் சோனாக்‌ஷி !

சென்னை: கோச்சடையானைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதுப்படத்தில் இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்கா நடிப்பது உறுதியாகிவிட்டது.

கோச்சடையான் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப் பட்டுள்ள நிலையில் வரும் 20ம் தேதி தனது அடுத்தப் படத்திற்கான பூஜை நடத்த திட்டமிட்டிருக்கிறார் ரஜினி. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அப்படத்தில் ரஜினிக்கு இரண்டு நாயகிகள். அதில் ஒரு நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தற்போது மற்றொரு நாயகியான சோனாக்‌ஷி சின்காவும் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

தான் ரஜினி படம் முலம் தென்னிந்திய சினிமாவில் காலெடி எடுத்து வைப்பதாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை உறுதி செய்துள்ளார் சோனாக்‌ஷி சின்கா.

நண்பர் மகள்...

நண்பர் மகள்...

ரஜினியின் நெருங்கிய நண்பரும், அவரது ஸ்டைல் குருவுமான இந்தி நடிகர் சத்ருகன் சின்காவின் மகள் தான் 27 வயது சோனாக்‌ஷி சின்கா.

திரைக்கதையில் மாற்றம்...

திரைக்கதையில் மாற்றம்...

ரஜினிக்கும் சோனாக்‌ஷிக்கும் அதிக வயது வித்தியாசம் இருப்பதால் அதற்குத் தக்க கதையில் சிறிது மாற்றம் செய்துள்ளாராம் படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

இது முதல் முறை அல்ல...

இது முதல் முறை அல்ல...

தற்போது 64 வயதாகும் ரஜினி 27 வயதே ஆகும் சோனாக்‌ஷியுடன் ஜோடி சேர மாட்டார் என்ற கருத்து பரவலாக இருந்தது. ஆனால், குறைந்த வயது நாயகிகளுடன் ரஜினி ஜோடி சேருவது இது முதல் முறை அல்லவே.

ரஜினியின் குறைந்த வயது நாயகிகள்...

ரஜினியின் குறைந்த வயது நாயகிகள்...

ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக தன்னுடன் நடித்த மீனாவுடன் எஜமான் படத்தில் ஜோடியாக நடித்தவர் என்ற சிறப்புக்குரியவர் ரஜினி. இப்போது மீண்டும் அதே போன்று மிகக் குறைந்த வயது நடிகையுடன் ஜோடி சேர இருக்கிறார்.

ரஜினி ஜோடியா...!

ரஜினி ஜோடியா...!

ரஜினி மற்றும் சத்ருகன் சின்கா சேர்ந்து நடித்த ‘அஸ்லி நக்லி' படப்பிடிப்பின் போது சிறு குழந்தையாக வலம் வந்த சோனாக்‌ஷி, தற்போது ரஜினியின் ஜோடியாகவே நடிக்க இருக்கிறார் என ஆச்சர்யம் காட்டுகின்றனராம் அவரது குடும்பத்தினர்.

உதாரணமாக...

உதாரணமாக...

அதேபோல், தனது அக்கா கரீஷ்மா நடிகர் அக்‌ஷய்குமாருடன் ஜோடியாக நடித்த போது சிறுமியாக இருந்த கரீனாகபூர் பிறகு அவரது ஜோடியாகவே நடிக்கவில்லையா என தெரிவிக்கின்றனர் அவர்கள்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா....

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா....

மேலும், ஏற்கனவே தன்னை விட வயது மூத்த அஜய்தேவ்கன், அக்‌ஷய்குமார் மற்றும் சல்மான்கானுடன் சோனாக்‌ஷி ஜோடியாக நடித்துள்ளதை அவர்கள் நினைவூட்டியுள்ளனர்.

ஒன் அண்ட் ஒன்லி ரஜினி சார்....

ஒன் அண்ட் ஒன்லி ரஜினி சார்....

மேலும், இது குறித்து சோனாக்‌ஷி கூறுகையில், ‘கடைசியில் என்னுடைய தென்னிந்திய சினிமா பிரவேசம் நடக்கயிருக்கிறது. அவர் வேறு யாருமில்லை ஒன் அண்ட் ஒன்லி ரஜினி சார். ரொம்ப நல்ல கதை' என ரஜினி படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

கை நழுவிய வாய்ப்புகளும் நன்மைக்கே....

கை நழுவிய வாய்ப்புகளும் நன்மைக்கே....

சோனாக்‌ஷி ஏற்கனவே கமலின் விஸ்வரூபம் படத்தில் நடிப்பதாக இருந்தது, ஆனால் படவேலைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அதில் அவர் நடிக்கவில்லை. சூர்யாவின் அஞ்சான் படத்தில் சோனாக்‌ஷி ஒரு பாடலுக்கு நடனமாடுவதாகக் கூட சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது சூப்பர்ஸ்டாரின் ஜோடியாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் சோனாக்‌ஷி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X