தீ எரியட்டும், எனக்கு கவலையில்லை.. ட்விட்டர் கணக்கில் இருந்து திடீரென்று வெளியேறிய பிரபல ஹீரோயின்!

By

மும்பை: நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, தனது ட்விட்டர் கணக்கை முடக்கியுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்‌ஷி சின்ஹா. இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய லிங்கா படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

வாரிசு நடிகர், நடிகைள்

வாரிசு நடிகர், நடிகைள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, இந்தி சினிமாவில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. சினிமாவில் நிலவும் அரசியல், வாரிசு நடிகர், நடிகைகளால் மற்றவர்களுக்கான வாய்ப்பு பறிபோவது உள்ளிட்டவற்றை வைத்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான வாக்குவாதங்கள் நடந்துவருகின்றன.

சோனாக்‌ஷி சின்ஹா

சோனாக்‌ஷி சின்ஹா

சிலர், நேரடியாக வாரிசு நடிகர், நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்களுக்கே சென்று சரமாரியாக விளாசினர். நடிகை சோனாக்‌ஷியின் பக்கங்களுக்கு சென்றும் சில நெட்டிசன்கள் கேள்வி கேட்டனர். சுஷாந்த் சிங் மரணமடைந்தபோது, நடிகை கங்கனா, பாலிவுட்டை கடுமையாகச் சாடியிருந்தார். இது பரபரப்பானது. கடும் வாக்குவாதங்களும் நடந்தன.

விளம்பரம் தேடுகிறார்கள்

விளம்பரம் தேடுகிறார்கள்

அப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை சோனாக்‌ஷி, 'ஒருவர் மரணமடைந்திருக்கும் நேரத்தில் சிலர் அவர்கள் பிரச்னைகளைச் சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். தயவுசெய்து அப்படி செய்வதை நிறுத்துங்கள். உங்களது எதிர்மறைக் கருத்தும், வெறுப்பும் இப்போது தேவையற்றது' என்று கூறியிருந்தார்.

மன ஆரோக்கியம்

மன ஆரோக்கியம்

இதை கங்கனாவுக்கு எதிராகத்தான் அவர் கூறியதாக ரசிகர்கள் கூறினர். இதற்கும் காரசாரமான வாக்குவாதங்கள் கிளம்பின. இந்நிலையில் சோனாக்‌ஷி, தனது ட்விட்டர் கணக்கை முடக்கி உள்ளார். 'உங்கள் மன ஆரோக்கியத்தை காப்பதற்கான முதல்படி எதிர்மறையான விஷயங்களில் இருந்து விலகி இருப்பதுதான்.

செயலிழக்கச் செய்கிறேன்

செயலிழக்கச் செய்கிறேன்

இப்போதெல்லாம் எதிர்மறை விஷயங்கள் ட்விட்டரில்தான் அதிகமாக இருக்கிறது. நான் எனது கணக்கைச் செயலிழக்கச் செய்கிறேன்' என்று கூறியுள்ளார். பின்னர் இந்த ஸ்கிரீன்ஷாட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், தீ எரியட்டும், எனக்கு கவலை இல்லை' என்று கூறியுள்ளார். அதில், ரசிகள் கருத்துத் தெரிவிக்கும் பகுதியையும் முடக்கி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X