ரஜினியின் லிங்கா... ஹைதராபாத் படப்பிடிப்பை முடித்தார் சோனாக்ஷி!
ரஜினியின் லிங்கா படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கும் சோனாக்ஷி சின்ஹா, படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பை கிளம்பினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி இரு வேடங்களில் நடிக்க, கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் படம் லிங்கா.
இந்தப் படத்துக்கு ரஜினி வெறும 30 நாள்தான் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்று சிலர் புரளி கிளப்பி வந்தனர்.

60 நாட்களுக்குப் பிறகும்
ஆனால் படப்பிடிப்பு தொடங்கி 60 நாட்கள் கடந்தும் ரஜினி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைசூரில் நடந்த முதல்கட்டப் படப்பிடிப்பில் அவருடன் சோனாக்ஷி சின்ஹா பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. அதில் 2 வாரங்கள்தான் சோனாக்ஷி நடித்தார்.

ஹைதராபாத்
அத்துடன் அவர் மும்பை கிளம்ப, மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. 40 நாட்கள் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்தது. அடுத்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்கி, கடந்த 15 நாட்களுக்கும் மேல் நடந்து வருகிறது.

அனுஷ்கா
இந்த இரண்டாம் கட்டப்படப்பிடிப்பின் ஆரம்ப இரு வாரங்களும் சோனாக்ஷி சின்ஹா - ரஜினி பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. உடன் அனுஷ்காவின் காட்சிகளும் படம் பிடிக்கப்பட்டன.

சென்னையில்
இரண்டாம் கட்டப்படப்பிடிப்பை முடித்த கையோடு தன் வீட்டுக்குக் கிளம்பினார் சோனாக்ஷி. அடுத்து சென்னையில் தொடங்கும் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பிலும் சோனாக்ஷி சின்ஹா கலந்து கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











