எருமைமாடுன்னு கலாய்த்த நெட்டிசன்: நெத்தியடி கொடுத்த லேடி ரஜினி
மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தன்னை எருமைமாடு என்று கிண்டல் செய்தவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகைகள் குச்சி, குச்சியாக இருக்கும் பாலிவுட்டில் பூசினாற் போன்று இருப்பவர் சோனாக்ஷி சின்ஹா. அவரின் உடல் எடையையும், நெற்றியையும் பலரும் தொடர்ந்து கிண்டல் செய்கிறார்கள்.
இந்நிலையில் ஒருவர் அவரை எருமைமாடு என்று கலாய்த்துள்ளார்.

சோனாக்ஷி
சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கான் நடத்தும் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோனாக்ஷி சின்ஹாவிடம் அவரை கலாய்த்து போடப்பட்ட சில ட்வீட்டுகளை படிக்க வைத்தார்கள். அதில் ஒருவர் சோனாக்ஷியை எருமைமாடு என்று கலாய்த்திருந்தார்.

விளாசல்
கலாய்த்திருந்தவர் எருமைமாடு என்கிற வார்த்தையை B-U-F-F-E-L-L-O என்று தவறாக எழுதியிருந்தார். அதை பார்த்த சோனாக்ஷி முதலில் சரியாக எழுதக் கற்றுக் கொள்ளுங்கள் என்று அந்த நபரை பதிலுக்கு கலாய்த்தார்.

தபாங்
நான் தபாங் படத்திற்காக 30 கிலோ எடையை குறைத்தேன். இருப்பினும் என் உடல் எடையை வைத்து கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார்கள். நான் நடிக்க வரும் முன்பு குண்டாக இருந்தேன். ஆனால் தற்போதும் கலாய்க்கிறார்கள் என்கிறார் சோனாக்ஷி.

கிண்டல்
நான் என் உடல் எடையை பாதிக்கு மேல் குறைத்துவிட்டேன். இருப்பினும் அது யார் கண்ணுக்கும் தெரியவில்லை. எடையை குறைக்க நான் பட்ட கஷ்டம் அவர்களுக்கு தெரியாது. இருந்தும் பேசுபவர்கள் பேசட்டும், அதனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சோனாக்ஷி சின்ஹா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











