சூர்யா படத்தில் குத்து டான்ஸ் ஆடும் சோனாக்‌ஷி

By Mayura Akilan

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில், பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்கா ஒரு பாடலுக்கு குத்து டான்ஸ் ஆட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. .

சூர்யா, சமந்தா, மனோஜ் பாஜ்பாய் மற்றும் பலர் நடிக்கும் படமொன்றை இயக்குநர் லிங்குசாமி தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. யுவன் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் விநியோக உரிமையை யு.டிவி நிறுவனம் இப்படத்தினை வாங்கியிருக்கிறது.

தை திருநாளில் பெயர்

தை திருநாளில் பெயர்

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. படத்தின் பர்ஸ்ட் லுக், தலைப்போடு பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது.

கோவாவில் சூர்யா, சமந்தா

கோவாவில் சூர்யா, சமந்தா

கோவாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் லிங்குசாமி.

சூர்யா, சமந்தா பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றை காட்சிப்படுத்த இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சோனாக்ஷி சின்கா

சோனாக்ஷி சின்கா

மும்பையைப் பற்றிய கதை என்பதால் மும்பை நாயகி ஒருவரை பாடல் ஒன்றிற்கு நடனமாட வைக்கலாம் என்று ஆலோசித்து சோனாக்‌ஷி சின்காவை அணுகியிருக்கிறார்கள். அவரும் கதையில் பாடல் இடம்பெறும் இடத்தினைக் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

குத்து நடனம்

குத்து நடனம்

விரைவில், சோனாக்‌ஷி சின்கா பாடல் காட்சியை மும்பையில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்த இருக்கிறார்கள். இந்த நடனத்தை சோனாக்ஷி தனியாக ஆடுவார் என்று கூறப்படுகிறது சூர்யா உடன் ஆடுவாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

லிங்குசாமி ஒப்புதல்

லிங்குசாமி ஒப்புதல்

இந்த தகவலை லிங்குசாமியும் உறுதிபடுத்தியுள்ளார். தமிழில் சோனாக்‌ஷி சின்கா பெயர் இடம்பெறும் முதல் படமாக சூர்யா - லிங்குசாமி படம் அமையவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X