என்னது... சூப்பர்ஸ்டார் ஜோடி போலீசா நடிக்கப் போறாங்களா..?
மும்பை : 'லிங்கா' படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த சோனாக்ஷி சின்ஹா, பாலிவுட்டில் 'அகிரா, 'ஃபோர்ஸ் 2' போன்ற ஆக்ஷன் படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தபடியாக ஒரு படத்தில் போலீஸாக நடிக்க உள்ளார். நிகில் அத்வானி தயாரிக்கும் இந்தப் படத்தை ரஞ்சித் திவாரி இயக்குகிறார்.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் நிகில் அத்வானி, 'இந்தப்படம் தொடர்பாக சோனாக்ஷியிடம் பேசினேன். தற்போது ரஞ்சித் திவாரி இந்தக் கதையை எழுதி வருகிறார். கதையின் ஒன்லைனை சோனாக்ஷியிடம் கூறியதுமே அவருக்குப் பிடித்து போய் நடிக்க ஆர்வமாய் இருந்தார்.' எனக் கூறியுள்ளார்.

ஆனால், இந்தத் தகவல் படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சோனாக்ஷி உள்ளிட்ட நடிகர்கள் தேர்வு முடிந்ததும் பட வேலைகள் ஆரம்பிக்கும் என்று கூறியுள்ளார் நிகில் அத்வானி.
சோனாக்ஷி சின்ஹா தற்போது 'இத்திபா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் வரும் நவம்பர் 3-ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு சோனாக்ஷி போலீஸ் வேடத்தில் ரஞ்சித் திவாரி படத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











