»   »  விஜய்க்கு ஜோடியாகும் சூப்பர் ஸ்டார் மகள்

விஜய்க்கு ஜோடியாகும் சூப்பர் ஸ்டார் மகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் தான் விஜய்யை வைத்து மீண்டும் இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.

ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி ஆகிய வெற்றிப் படங்களை தந்தார். இந்நிலையில் விஜய், முருகதாஸ் மீண்டும் கூட்டணி சேரவிருக்கிறார்கள்.

விஜய் தற்போது அட்லீயின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

விஜய் 62

விஜய் 62

அட்லீ படத்தை முடித்த பிறகு விஜய் முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். விஜய் 62 என்று தற்காலிகமாக பெரியப்பட்டுள்ள அந்த படத்தின் ஹீரோயினை பாலிவுட்டில் இருந்து அழைத்து வருகிறார்கள்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படம் மூலம் கோலிவுட் வந்த சோனாக்ஷி சின்ஹாவை விஜய்க்கு ஜோடியாக்கிப் பார்க்க விரும்புகிறார் முருகதாஸ்.

முருகதாஸ்

முருகதாஸ்

சோனாக்ஷி ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் ஹாலிடே, அகிரா ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். அகிராவில் ஹீரோவே சோனாக்ஷி சின்ஹா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

விஜய் படத்தில் நடிப்பது குறித்து சோனாக்ஷி சின்ஹாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். விஜய் 62 படத்தில் அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

English summary
According to reports, AR Murugadoss is planning to rope Bollywood actress Sonakshi Sinha in his upcoming movie with Vijay.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos