உடைக்க முடியாததைக்கூட உடைச்சீட்டீங்களே.. கோபமாக வீடியோ வெளியிட்ட ரஜினி ஹீரோயின்.. சாரி கேட்ட இண்டிகோ
தனது பயணப்பெட்டி உடைபட்டது குறித்து நடிகை சோனாக்ஷி சின்ஹா வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video
மும்பை: தனது சூட்கேஸை சேகப்படுத்தியதாக தனியார் விமான போக்குவரத்து நிறுவனம் மீது நடிகை சோனாக்ஷி சின்ஹா புகார் தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. இந்தி சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து அவர் தமிழில் நடிக்கவில்லை.
இந்நிலையில் சோனாக்ஷி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இண்டிகோ விமானத்தில் தான் பயணித்ததாகவும், ஒழுங்காக இருந்த தனது சூட்கேஸ் முழுவதுமாக சேதமடைந்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு காரணம் விமானப் போக்குவரத்து நிறுவனமும், பெட்டி தயாரிப்பு நிறுவனமும் தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோனாக்ஷியின் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. அவருக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் குரல் கொடுத்துள்ளனர். ஒரு சில ரசிகர்கள் தங்களுக்கும் அதேபோல் நேர்ந்ததாக் கூறியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு இண்டிகோ விமான நிறுவனம் சோனாக்ஷியிடம் மன்னிப்பு கோரியது.


Click it and Unblock the Notifications











