ரூமர்லாம் இல்லை.. சோனாக்‌ஷி சின்ஹாவின் திருமண அழைப்பிதழே லீக் ஆகிடுச்சு.. அப்பாவை அழைப்பாரா?

மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா இந்த மாதம் தனது திருமணத்தை செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த தேதியில் எங்கே அவரது திருமணம் நடைபெற போகிறது என்பது குறித்த தகவல் அடங்கிய திருமண அழைப்பிதழ் ஒன்றும் இணையத்தில் கசிந்து தீயாக பரவி வருகிறது.

நடிகை சோனாக்ஷி சின்ஹா கடந்த 2020ம் ஆண்டு முதல் ஜாகிர் இக்பால் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

sonakshi sinha shatrughan sinha marriage bollywood

பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்‌ஷி சின்ஹா சல்மான் கான் நடித்த தபாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். சமீபத்தில், அப்பா அம்மாவை விட்டு விட்டு தனியாக மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி குடியேறினார்.

சூப்பர் ஸ்டார் ஜோடி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அனுஷ்கா, சந்தானம், ராதா ரவி உள்ளிட்ட பலர் நடித்த லிங்கா திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் பாரதி எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமான சோனாக்ஷி சின்ஹா. அதன் பின்னர் தமிழில் எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை.

சத்ருகன் சின்ஹாவின் மகள்: ரஜினிகாந்தின் நண்பரான சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் சோனாக்‌ஷி சின்ஹா. வாரிசு நடிகையாக பாலிவுட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான தபாங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சிம்பு ஒஸ்தி என டைட்டில் வைத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படமே சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்த சோனாக்ஷி சின்ஹா அடுத்ததாக ரவுடி ரத்தோர் படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தார். தபாங் 2 மற்றும் 3 என சல்மான் கானுடன் தொடர்ந்து நடித்த சோனாக்‌ஷி சின்ஹா ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான அகிரா படத்திலும் நடித்திருந்தார்.

திருமண அழைப்பிதழ் லீக் ஆகிடுச்சு: பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா ஜாகீர் இக்பால் எனும் இஸ்லாமியரை காதலித்து வரும் நிலையில், வரும் ஜூன் 23ம் தேதி மும்பையில் உள்ள பாஸ்டியன் எனும் இடத்தில் இரவு 8 மணிக்கு மேல் திருமணம் நடைபெறவுள்ளதாக உள்ள திருமண அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது.

அப்பாவை அழைப்பாரா?: சமீபத்தில் நடிகர் சத்ருகன் சின்ஹா செய்தியாளர்கள் சந்திப்பின் போது தனது மகள் திருமணம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் தனக்கு இதுவரை எந்த தகவலையும் அவர் சொல்லவில்லை என்றும் கூறியிருந்தார். 37 வயதான சோனாக்‌ஷி சின்ஹாவுக்கும் அவரது தந்தைக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறதா? என பாலிவுட் வட்டாரங்கள் கேள்வி எழுப்பி உள்ளன. மேலும், சோனாக்‌ஷி சின்ஹா தனது திருமணத்துக்கு அப்பாவை அழைப்பாரா? மாட்டாரா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சோனாக்‌ஷி சின்ஹாவின் திருமணத்துக்கு சில பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தான் இந்த திருமண அழைப்பிதழ் கசிந்துள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால், இதுதொடர்பாக சோனாக்‌ஷி சின்ஹா வாயே திறக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X