ஏன் இப்படி பயப்படறாங்க? சீனியர் ஹீரோவுடன் நடிக்க அந்த பிரபல ஹீரோயினும் திடீர் மறுப்பு!

By

ஐதராபாத்: பிரபல சீனியர் ஹீரோவுடன் நடிக்க மற்றொரு ஹீரோயினும் மறுப்பு தெரிவித்து விட்டார்.

சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பதை இளம் ஹீரோயின்கள் விரும்பாததால், அவர்களுக்கு ஹீரோயின் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது.

குறிப்பாக தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களுக்கு இந்த சிக்கல் அதிகமாக இருக்கிறது.

ஹீரோயின் சிக்கல்

ஹீரோயின் சிக்கல்

சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சாரியா படத்துக்கும் இந்தச் சிக்கல் இருந்தது. பிறகு அவர் மகன் ராம் சரண் சொன்னதை அடுத்து காஜல் அகர்வால் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதே போல தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான பாலகிருஷ்ணாவுக்கும் ஹீரோயின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தயக்கக் காரணம்

தயக்கக் காரணம்

பட வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகைகள் கூட சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தயங்குகின்றனர். சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தால், இளம் ஹீரோக்கள் அழைக்க மாட்டார்கள் என்பதும் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பதும் நடிகைகளின் தயக்கத்துக்கு காரணம் என்கிறார்கள்.

தவிர்த்த கேத்தரின்

தவிர்த்த கேத்தரின்

இந்நிலையில், பாலகிருஷ்ணா அடுத்து நடிக்கும் படத்தை போயபதி ஶ்ரீனு இயக்குகிறார். இந்தப் படம் லாக்டவுனுக்கு முன்பே தொடங்கி இருக்க வேண்டும். ஹீரோயின் கிடைக்காததால் தொடங்கவில்லை. முதலில் கேத்தரின் தெரசாவை கேட்டனர். அவர் அதிக சம்பளம் கேட்டு தவிர்த்தார்.

கால்ஷீட் இல்லை

கால்ஷீட் இல்லை

அடுத்து சோனாக்‌ஷி சின்ஹா, கால்ஷீட் இல்லை என்று கைவிரித்து விட்டார். பின்னர் ஸ்ரேயா நடிப்பதாகவும் கூறப்பட்டது. பின்னர் பூர்ணா, சாயிஷா, பிரயாகா மார்டின், பிரக்யா ஜெய்ஸ்வால் நடிப்பதாகக் கூறப்பட்டது. பிரயாகாவுடன் நடந்த போட்டோஷூட்டில் அவர் பாலகிருஷ்ணாவுக்கு மேட்ச் ஆகவில்லை என்று விலகினார்.

சோனல் சவுகான்

சோனல் சவுகான்

பின்னர் சாயிஷா நடிப்பதாகக் கூறப்பட்டது. படக்குழுவே இதை அறிவித்தது. ஆனால், அவரும் விலகினார். பின்னர் பிரக்யா ஜெய்ஸ்வால் நடிப்பதாகக் கூறப்பட்டது. இன்னொரு ஹீரோயினாக நடிக்க பலரிடம் பேசினர். நடிகை சோனல் சவுகானிடமும் படத்தின் இயக்குனர் பேசியுள்ளார்.

முன்னேற்றம் இல்லை

முன்னேற்றம் இல்லை

அவர், பாலகிருஷ்ணாவுடன் இதற்கு முன் லெஜண்ட், டிக்டேட்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதால் சம்மதிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவரும் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பாலகிருஷ்ணாவுடன் நடித்து, தனது கேரியரில் முன்னேற்றம் இல்லை என்று அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X