வெறும் பனியனுடன் கப்பல் நடிகை வெளியிட்ட கலக்கல் புகைப்படம்!
மும்பை : லாக்டவுனில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து செம ஃபிட்டாக மாறியுள்ள சோனம் பாஜ்வா முண்டா பனியனுடன் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Recommended Video
இவர் சமீபத்தில் நடித்த காட்டேரி திரைப்படம் ஹாரர் நிறைந்த காட்சியுடன் உருவாகியிருந்த நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் ஓடிடி தளத்தில் வெளியாக தயாராக உள்ளது.
பஞ்சாபி மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வரும் சோனம் பாஜ்வா சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

மிகப்பிரபலமான நடிகையாக
ஒரு சில கதாநாயகிகளுக்கு அவர்கள் நடிக்கும் முதல் திரைப்படமே லக்காக இருக்கும் நிலையில், ஆரம்பமே அதிரடியாக "பெஸ்ட் ஆப் லக்" என்ற பஞ்சாபி திரைப்படத்தில் நடித்து சோனம் பாஜ்வாக கதாநாயகியாக வலம் வர தொடங்கினார். 2014ஆம் ஆண்டு இவர் கதாநாயகியாக நடித்து வெளியான "பஞ்சாப் 1984" திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்து பல வசூல் சாதனை புரிந்த நிலையில் சோனம் பாஜ்வா மிகப்பிரபலமான நடிகையாக மக்களால் அறியப்பட்டார்.

சிறப்பு தோற்றத்தில்
இவ்வாறு "பஞ்சாப் 1984 " மிகப்பெரிய வெற்றியடைந்தது தொடர்ந்து தமிழில் அறிமுக இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கிய கப்பல் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார். இதற்கிடையில் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்து வந்த சோனம் பாஜ்வா ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தும் ஒருசில பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டும் உள்ளார்.

கப்பல் திரைப்படத்தில்
பஞ்சாபி, தமிழ் மொழிகளில் நடிக்கத் தொடங்கிய சோனம் பஜ்வா தற்போது ஹிந்தி, தெலுங்கு என அவரது நடிப்பு பாதையை பல மொழி திரைத்துறைகளில் பதித்து சிறகடித்து பறந்து வருகிறார். இவ்வாறு தமிழில் இவர் நடித்த முதல் படமான கப்பல் திரைப்படத்தில் வைபவ்வுடன் இணைந்து நடித்திருந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, தற்பொழுது மீண்டும் வைபவ்வுடன் இணைந்து நடித்துவருகிறார்.

ஓடிடி தளத்தில் வெளியாகிறது
வைபவ், வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா எனப் பல இளம் நடிகர்கள் நடித்துள்ள காட்டேரி திரைப்படம், கே.இ ஞனவேல் ராஜா மற்றும் எஸ்.ஆர் பிரபு இணை தயாரிப்பில் உருவாகி வர இயக்குனர் டிகே இயக்கியுள்ளார். ஹாரர் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வரும் நிலையில் லாக்டவுன் காரணமாக இந்த படம் திரையில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது என அதிகாரப்பூர்வ தகவலை சில மாதங்களுக்கு முன்பு இப்படக்குழு தெரிவித்திருந்தது.

மயக்கம் பார்வையுடன்
இவ்வாறு இன்னும் ஒரு சில வாரங்களில் காட்டேரி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், லாக்டவுனில் கிடைக்கும் நேரத்தில் உடற்பயிற்சி செய்து செம ஃபிட்டாக மாறியுள்ள சோனம் பாஜ்வா, அதைப் புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெறும் கருப்பு நிற பனியனுடன் தன்னுடைய கட்டழகு தெரிகிற வகையில் மயக்கம் பார்வையுடன் செம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்திருக்கும் இந்த லாக்டவுன் கவர்ச்சி புகைப்படம் தற்பொழுது பலராலும் பாராட்டப்பட்டும் ரசிக்கப்படும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











