பெரியம்மா ஸ்ரீதேவியால் அப்பா பேச்சை கேட்காத சோனம் கபூர்
Recommended Video

மும்பை: பெரியம்மா ஸ்ரீதேவியால் நடிகை சோனம் கபூர் தன் அப்பா அனில் கபூரின் பேச்சை கேட்க மறுத்துவிட்டார்.
பாலிவுட் நடிகை சோனம் கபூர், தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை இந்த மாத இறுதியில் திருமணம் செய்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் திருமண தேதி மே 7, 8 ஆக மாற்றப்பட்டுள்ளது.
திருமணம் மும்பையில் சிம்பிளாக நடக்க உள்ளது. திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

சோனம்
சோனம் சுவிட்சர்லாந்தில் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். நடிகர் அனில் கபூரோ தனது மூத்த மகளான சோனமின் திருமணத்தை ஊரே வியக்கும் வகையில் பிரமாண்டமாக நடத்த ஆசைப்பட்டார்.

ஸ்ரீதேவி
பெரியம்மா ஸ்ரீதேவி மரணம் அடைந்துள்ள நேரத்தில் பிரமாண்டமாக திருமணத்தை நடத்த வேண்டாம் என்று சோனம் கபூர் தெரிவித்துவிட்டார். மேலும் வெளிநாட்டில் அல்ல மும்பையில் வைத்து சிம்பிளாக திருமணத்தை முடித்துவிடலாம் என்று சோனம் தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

அனில்
மகள் சொல்வதில் நியாயம் இருந்ததால் அனில் கபூர் தனது மனதை மாற்றிக் கொண்டார். திருமணம் சிம்பிளாக நடந்தாலும் வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்துகிறார் அனில்.

டெல்லி
மும்பை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சோனம் கபூரின் திருமண நிகழ்ச்சியில் அம்மா ஸ்ரீதேவியின் பாடல்களுக்கு நடனமாடுகிறார் ஜான்வி கபூர்.


Click it and Unblock the Notifications











