»   »  காதலரை மணந்த தனுஷ் ஹீரோயின்: இதுக்கு பெயர் தான் சிம்பிளா?

காதலரை மணந்த தனுஷ் ஹீரோயின்: இதுக்கு பெயர் தான் சிம்பிளா?

By Siva
Subscribe to Oneindia Tamil
பாலிவுட் திரையுலகமே திரண்ட சோனம் கபூர் கல்யாண வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலரான ஆனந்த் அஹுஜாவை பெற்றோர் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்து கொண்டார். மும்பையில் உள்ள அவரது ஆன்ட்டியின் பங்களாவில் திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

மணமகள்

மணமகள்

சோனம் கபூர் சிவப்பு நிற உடையில் மிகவும் அழகாக இருந்தார். பங்களாவில் அமைக்கப்பட்டிருந்த மேடையை பார்த்து அனைவரும் வியந்தனர். அந்த மேடைக்கான ரோஜா பூக்கள் ஹாலந்து மற்றும் ஸ்வீடனில் இருந்து வரவழைக்கப்பட்டதாம்.

ஹோட்டல்

ஹோட்டல்

சோனம், ஆனந்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் உள்ள தி லீலா ஹோட்டலில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சீக்கிய முறை

சீக்கிய முறை

சோனம், ஆனந்தின் திருமணம் சீக்கிய முறைப்படி நடந்தது. பங்களா வளாகத்தில் உள்ள கோவிலில் வைத்து அவர்கள் மாலையை மாற்றிக் கொண்டனர்.

 இதுவா?

இதுவா?

பெரியம்மா ஸ்ரீதேவி இறந்ததால் தனது திருமணத்தை எளிமையாக நடத்துமாறு சோனம் கபூர் தனது தந்தை அனில் கபூரிடம் தெரிவித்திருந்தார். இந்த எளிமையை பார்த்தே பலரும் வியந்துவிட்டனர். இதற்கு பெயர் தான் எளிமையான திருமணமா?

குஷி

குஷி

நாத்தனார் மகனின் திருமண விழாவில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் ஸ்ரீதேவி உயிர் இழந்தார். அவரது மரணத்திற்கு பிறகு கபூர் குடும்பத்தில் நடந்துள்ள முதல் திருமணம் இது. திருமண விழாவில் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி மிகவும் அழகான உடையில் கலந்து கொண்டனர்.

தைமூர்

தைமூர்

சோனம் கபூரின் தோழியான கரீனா கபூர் தனது கணவர் சயிப் அலி கான், மகன் தைமூர், அக்கா கரிஷ்மா கபூருடன் திருமணத்திற்கு வந்திருந்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Bollywood actress Sonam Kapoor has married her long time boy friend Anand Ahuja at her aunt's bunglaow in Mumbai on tuesday.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more