காதலர் தினத்தன்று தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பாலிவுட் நடிகை!

By Vignesh Selvaraj

Recommended Video

காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பாலிவுட் நடிகை!

சென்னை : பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை சோனம் கபூர். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சோனம் கபூர் நேற்று காதலர் தினத்தை தன் காதலருடன் கொண்டாடியுள்ளார்.

மேலும், தன் காதலரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

சோனம் கபூர்

சோனம் கபூர்

பாலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் அனில் கபூர். இவரது மகள் சோனம் கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அனில் கபூர் மற்றும் சோனம் கபூர் ஆகியோர் ஷெல்லி தார் இயக்கும் படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.

பேட்மேன்

பேட்மேன்

பால்கி இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பேட் மேன்' படத்திலும் நடித்திருக்கிறார் சோனம் கபூர். தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார் சோனம் கபூர்.

காதலர் புகைப்படம்

காதலர் புகைப்படம்

இந்நிலையில், நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு 'நான் தான் உலகிலேயே மிக அதிர்ஷ்டசாலி' எனக் குறிப்பிட்டு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார் சோனம் கபூர். அதோடு தனது காதலர் ஆனந்த் அகுஜாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.

ஜூனில் திருமணம்?

ஜூனில் திருமணம்?

பாலிவுட் பிரபலங்கள் பலர் காதலர் தின வாழ்த்துகளைச் சொல்லிக் கொண்டிருக்க காதலர் புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் சொனம் கபீஊர். சோனம் கபூருக்கும் அவரது காதலருக்கும் வரும் ஜூன் மாதம் திருமணம் நடக்கவிருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X