அக்ஷய் குமார் பற்றி சொல்லக் கூடாத ரகசியத்தை சொல்லிய வாரிசு நடிகை
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பற்றிய ரகசியம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை சோனம் கபூர்.
ஆர். பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்மேன் படம் வரும் 26ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் படக்குழு பிசியாக உள்ளது.
பட விளம்பர நிகழ்ச்சியில் பேசிய சோனம் கபூர் கூறியதாவது,

மனைவி
அக்ஷய் குமார் பற்றி ஒரு ரகசியம் கூறுகிறேன். அவர் தன் மனைவி ட்விங்கிள் கன்னாவுக்கு ரொம்பவே பயப்படுவார். எனக்கு ட்விங்கிள் கன்னாவை பல ஆண்டுகளாக தெரியும்.

தயாரிப்பாளர்
பேட்மேன் பட தயாரிப்பாளராக இருந்தாலும் ட்விங்கிள் நான் இயக்குனருடன் பேசும்போது தலையிட மாட்டார். இயக்குனரின் முடிவே இறுதி முடிவு என்று விட்டுவிட்டோம்.

மகன்
எங்கள் வீட்டில் மகள்களும், மகன்களும் சரிசமமாக நடத்தப்படுகிறார்கள். நான், தங்கை ரியாவுக்கு பிறகு மூன்றாவதாக பெண் பிறக்க வேண்டும் என்று அப்பா அனில் கபூர் எதிர்பார்த்தார். ஆனால் என் தம்பி ஹர்ஷ்வர்தன் பிறந்தான்.

மகிழ்ச்சி
என் தங்கை ரியா பிறந்தபோது அப்பா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நான் மூத்த பிள்ளை என்பதால் எனக்கு தனி அறை. ரியாவும், தம்பியும் ஒரு அறையை பகிர்ந்து கொண்டனர் என்றார் சோனம்.


Click it and Unblock the Notifications











