என்னம்மா லிப் லாக் கிஸ் அடிக்கிறார் சோனம்.. அதுவும் ஈஃபிள் டவர் பக்கத்துல.. காதலர் தின ஸ்பெஷலாம்!
மும்பை: காதலர் தினத்தை முன்னிட்டு பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது கணவர் ஆனந்த் அவுஜாவுக்கு முதன்முறையாக கொடுத்த லிப் லாக் கிஸ் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பிளாக் படத்தில் உதவி இயக்குநராக சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார்.
பின்னர், 2007ம் ஆண்டு வெளியான சாவரியா படத்தின் மூலம் நாயகியாக அப்கிரேடான சோனம் கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

தேசிய விருது
ராம் மத்வானி இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான நீர்ஜா படத்தில் நடித்த சோனம் கபூர், சிறப்பு பிரிவின் கீழ் தேசிய விருது பெற்றார். விமானத்தை கடத்தியவர்களிடம் இருந்து பயணிகளை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்த நீர்ஜாவின் வாழ்க்கை வரலாறு படமான அந்த படத்திற்காக ஏசியன் விருதுகள், ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.

சோனம் கபூர் திருமணம்
தேசிய விருது வென்ற கையோடு, 2018ம் ஆண்டு, இந்திய தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை நடிகை சோனம் கபூர் திருமணம் செய்துக் கொண்டார். பாலிவுட்டின் பிரம்மாண்ட திருமணமாக சோனம் கபூர் - ஆனந்த் அஹுஜா திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் 2018ம் ஆண்டு மே 8ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
லிப் கிஸ்
காதலர் தினமான இன்று, தங்களது காதல் அனுபவங்களையும், முதல் முறையாக 2016ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்துக்கு முன்னதாக இருவரும், தங்களது காதலர் தின லிப் லாக் முத்தத்தை பகிர்ந்து கொண்ட புகைப்படத்தை தற்போது, சோனம் கபூர் பதிவிட்டு, காதல் கணவர் ஆனந்த் அஹுஜாவுக்கு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
லவ் யூ பொண்டாட்டி
பழைய நினைவுகளை சோனம் கபூர் கிளறி விட, அதை பார்த்த ஆனந்த் அஹுஜா, லவ் யூ மை பொண்டாட்டி என்ற ரேஞ்சில் செம்ம ரிப்ளை ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும், அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சோனம் கபூருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, தனது காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இவ்ளோ ஸ்பீடா
சோனம் கபூர், தனது காதல் முத்தத்தை பகிர்ந்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட, ஒரு மணி நேரத்திற்குள் பாலிவுட் ரசிகர்கள், அதற்கு 2 லட்சத்திற்கும் மேல், லைக்குகளை குவித்து வருகின்றனர். பலரும், க்யூட் ஜோடி என்றும், எப்பவுமே ஹேப்பியா இருங்க என்றும், செம்ம லிப் லாக் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











