தனுஷ் பட நடிகை கர்ப்பம்.. பேபி பம்ப் போட்டோவை போட்டு குழந்தையை வரவேற்க காத்திருக்கும் சோனம் கபூர்!

மும்பை: நடிகர் தனுஷின் முதல் பாலிவுட் படமான ராஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சோனம் கபூர் கர்ப்பமாக உள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளும் பாலிவுட் நடிகையுமான சோனம் கபூர் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் இந்தி படங்களில் நடித்துள்ளார்.

தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்ட சோனம் கபூர் முதன்முறையாக தங்களது குழந்தையை வரவேற்க காத்திருக்கிறார்.

வாரிசு நடிகை

வாரிசு நடிகை

பாலிவுட் முழுக்க வாரிசு நடிகர்கள் குவிந்து கிடக்கின்றனர். பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் கடந்த 2007ம் ஆண்டு வெளியான சாவரியா எனும் படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். அபிஷேக் பச்சனுடன் இணைந்து டெல்லி 6 படத்தில் நடித்து பாலிவுட்டின் இளம் நடிகையாக பிரபலமானார்.

தனுஷ் ஜோடி

தனுஷ் ஜோடி

2013ம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான ராஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக சிறப்பான நடிப்பை சோனம் கபூர் வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். ஸோயா எனும் கதாபாத்திரத்தில் நடித்த சோனம் கபூரை இன்னமும் தனுஷ் ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அந்த படத்தில் வெளியான அத்தனை பாடல்களும் செம ஹிட்.

லெஸ்பியன் படம்

லெஸ்பியன் படம்

பெண்மையை முதன்மைப் படுத்தும் உமன் சென்ட்ரிக் படங்களில் நடிக்கத் தொடங்கிய சோனம் கபூர், 2019ம் ஆண்டு "ஏக் லட்கி கோ தேகா தோ அஸ்சா லகா" எனும் படத்தில் லெஸ்பியனாக நடித்து சர்ச்சையை கிளப்பினார். அந்த படத்தில் அவருடன் இணைந்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா லெஸ்பியனாக நடித்திருந்தார். சோனம் கபூரின் தந்தை அனில் கபூரும் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனது மகள் இதுபோன்ற துணிச்சலான கதைகளை தேர்வு செய்து நடிப்பது என்னை பெருமைப்படுத்துகிறது எனக் கூறியிருந்தார்.

தொழிலதிபருடன் திருமணம்

தொழிலதிபருடன் திருமணம்

கடந்த 2018ம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை சோனம் கபூர். மே 8ம் தேதி 2018ம் ஆண்டு பாலிவுட்டே வியக்கும் அளவுக்கு இவரது திருமணம் களைகட்டியது. அதன் பிறகு 4 ஆண்டுகள் தங்களின் திருமண வாழ்க்கையை கொண்டாடிய இவர்கள் தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர்.

சோனம் கபூர் கர்ப்பம்

சோனம் கபூர் கர்ப்பம்

இந்நிலையில், கணவர் மடியில் படுத்துக் கொண்டு தனது பேபி பம்பை காட்டியபடி எடுத்த போட்டோவை ஷேர் செய்து தான் கர்ப்பமாக இருக்கும் சந்தோஷமான விஷயத்தை ரசிகர்களுக்கு தெரிவித்து இருக்கிறார் நடிகை சோனம் கபூர். கூடிய சீக்கிரமே அழகான குழந்தையை பெற்றெடுக்க பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

கணவரின் மடியில்

கணவரின் மடியில்

கணவர் ஆனந்த் அஹுஜாவின் மடியில் படு கவர்ச்சியாக படுத்துக் கொண்டு பேபி பம்பை காட்டியபடி சோனம் கபூர் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் ஒரு மில்லியன் லைக்குகளை அள்ளி சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகிறது. பாலிவுட் நடிகையான இவருக்கு இன்ஸ்டாகிராமில் 31.7 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

சினிமாவை விடல

சினிமாவை விடல

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சோனம் கபூர். ஸோயா ஃபேக்டர், ஏகே vs ஏகே, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சோனம் கபூர் பிளைண்ட் எனும் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இருக்கும் அந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X