உபர் டாக்ஸியில் சோனம் கபூருக்கு நடந்த கொடுமை.. ட்வீட் போட்டு ரசிகர்களை அலர்ட் செய்தார்!
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனம் கபூருக்கு உபர் டாக்ஸியின் மோசமான பயண அனுபவம் கிடைத்துள்ளது.
அதுகுறித்து ட்வீட் போட்டு தனது ரசிகர்களை உபர் டாக்ஸி பயன்படுத்த வேண்டாம் என்றும், உள்ளூர் டாக்ஸிகளை பயன்படுத்துங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சோனம் கபூரை உபர் நிறுவன அதிகாரிகள் தொடர்பு கொண்ட போதும், நீங்க ஏற்கனவே நல்லா செஞ்சிட்டீங்க இனிமே எதுவும் வேண்டாம் என அதிரடியாக தெரிவித்துள்ளது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்கே நடந்தது
பாலிவுட் நடிகை சோனம் கபூர் லண்டன் சென்றுள்ள போது உபர் டாக்ஸியை பயன்படுத்தியுள்ளார். அந்த டாக்ஸியின் டிரைவர் சோனம் கபூரிடம் படு மோசமாக நடந்துள்ளது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சோனம் விளாசியுள்ளார்.
ரசிகர்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில், சோனம் கபூர் தனக்கு நடந்த அதிர்ச்சி சம்பவத்தை ட்விட்டரில் பகிர்ந்ததோடும் மட்டுமின்றி, தனது 12.8 மில்லியன் ரசிகர்களுக்கு உபர் டாக்ஸிகளை கவனமாகவும், ஜாக்கிரதையாகவும் பயன்படுத்துங்கள். சிறந்த வழி என்னவென்றால், உள்ளூர் வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என எச்சரித்துள்ளார்.

உபர் மன்னிப்பு
சோனம் கபூர் இப்படி அதிரடியாக ஒரு ட்வீட்டை போட்டவுடன் அலறியடித்த உபர் நிறுவன உயர் அதிகாரிகள், நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம். இனி நடக்காம பார்த்துக்குறோம். நீங்கள் சென்ற வாகனம் குறித்த விவரங்களை ஷேர் செய்யுங்க என்று கேட்டுள்ளனர்.

அதிகாரிகளை விளாசினார்
சோனம் கபூரிடம் மன்னிப்பு கேட்ட அதிகாரிகளை பார்த்து, ஏற்கனவே புகார் தெரிவிக்க முயற்சித்தேன். ஆனால், உங்கள் சிஸ்டம் சரியாக இல்லை. ஒவ்வொரு அதிகாரிகளும் தாங்கள் இல்லை என தப்பித்துக் கொள்ளத்தான் பார்க்கிறார்கள். முதலில் அதையெல்லாம் சரி செய்து விட்டு வாங்க, ஏற்கனவே பட்டதே போதும் என விளாசி தள்ளியுள்ளார்.
குடிகார டிரைவர்
உபர் டாக்ஸி பயணத்தின் போது உங்களுக்கு என்ன நேர்ந்தது என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சோனம் கபூர், டிரைவர் குடித்திருந்ததாகவும், தகாத வார்த்தைகளால் தன்னை திட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

மும்பை டு லண்டன்
தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துள்ள சோனம் கபூர், பாலிவுட்டுக்கும், லண்டனுக்கும் அடிக்கடி ஷிஃப்ட் ஆகி வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஜோயா ஃபேக்டர் மற்றும் ஏக் லட்கி கோ தேக்கா தோ அய்ஸா லேகா ஆகிய படங்கள் வெளியாகின. இந்த ஆண்டும் பிஸியாக புதுப்படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











