Just In
- 41 min ago
பத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
- 48 min ago
அதிகாரத்தை பயன்படுத்தி மகனின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கினாரா? முன்னாள் ஹீரோயின் விளக்கம்!
- 55 min ago
நீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்!
- 1 hr ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
Don't Miss!
- Sports
8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்!
- News
டென்ஷனில் எடப்பாடியார்.. :"அந்த" பக்கம் "இந்த" பக்கம் சாஞ்சுராதீங்க.. பொறுமையா இருங்க.. ஒரே அட்வைஸ்!
- Lifestyle
பார்வையையே இழக்கச் செய்யும் கண் அழுத்த நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
- Automobiles
கோவிட்-19 தடுப்பூசிகளை பத்திரமாக விநியோகிக்க புதிய டிரக் அறிமுகம்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜால்ரா.. கனிகா கபூருக்கு வக்காலத்து வாங்கும் பாலிவுட் நடிகை.. வெளுத்து எடுத்த நெட்டிசன்ஸ்!
ஜால்ரா.. கனிகா கபூருக்கு வக்காளத்து வாங்கும் பாலிவுட் நடிகை.. வெளுத்து எடுத்த நெட்டிசன்ஸ்!
மும்பை: பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மறைத்து, பல பார்ட்டிகளில் கலந்து கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலருக்கும், கனிகா கபூர் மூலமாக கொரோனா பரவி இருக்கும் என கனிகா மீது வழக்குகளும் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கனிகா கபூருக்கு பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் சப்போர்ட் செய்து, நெட்டிசன்களிடம் வசமாக சிக்கித் தவிக்கிறார்.

தெரிந்தே மறைத்தார்
பாலிவுட் பாடகி கனிகா கபூர், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை தெரிந்து கொண்டே மறைத்ததாகவும், மும்பை விமான நிலையத்தில், கொரோனா சோதனையில் இருந்து தப்பிக்க, பாத்ரூமில் ஒளிந்து கொண்டும், அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தும் எஸ்கேப் ஆகி இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளன.

கொதிக்கும் பிரபலங்கள்
கனிகா கபூர், செய்த இந்த தவறு மன்னிக்க முடியாதது என்றும், கொரோனா பாதிப்பு குறித்து தெரிந்த பிறகும், பல பிரபலங்கள் கூடும் பார்ட்டிகளில் ஏன் கலந்து கொண்டார் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரபலங்கள் கொதித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள் மற்றும் ரசிகர்களும் அவரது செயலை கண்டித்து வருகின்றனர்.
|
சோனம் கபூர் சப்போர்ட்
இந்நிலையில், தனுஷின் ராஞ்சனா உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை சோனம் கபூர் கனிகா கபூருக்கு சப்போர்ட் செய்து ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "கனிகா கபூர் மார்ச் 9ம் தேதி இந்தியா வந்தார். ஆனால், அப்போது, இந்தியர்கள் கொரோனா குறித்த பாதுகாப்பை மேற்கொள்ளாமல், ஹோலி விளையாடி கொண்டிருந்தனர்" என பதிவிட்டு, நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.
|
அறிவே இல்லையா
நாடே கனிகா கபூரின் அலட்சிய செயலால் திணறி போய் இருக்கிறது. இந்த நிலையில், இப்படி ஒரு ட்வீட் போட்டு, இந்தியர்களை கொச்சைப் படுத்தி, கனிகா கபூரை காப்பாற்ற ஏன் முயற்சி செய்கிறீர்கள், 1985ம் ஆண்டு பிறந்த உங்களுக்கு ஐ.க்யூ லெவல் கொஞ்சம் கூட இல்லையா என நெட்டிசன்கள் பங்கமாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.
|
ஹோலி கொண்டாட்டம்
அதனால், தான் கனிகா கபூர், மார்ச் 14ம் தேதி ஹோலி கொண்டாடினாரா? என பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுடன் இணைந்து கனிகா கபூர் ஹோலி கொண்டாடிய வீடியோவை போட்டு, இந்த நெட்டிசன் சோனம் கபூரை கேள்விக்கு மேல் கேள்விகளாக கேட்டு வருகிறார். மேலும், பொறுப்புள்ளவராக இருங்கள், இதுபோன்றவர்களுக்கு சப்போர்ட் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கின்றனர்.
|
மூளைக்கு பதிலாக
பாலிவுட் நடிகை சோனம் கபூரை உருவாக்கும் போது, அவரது மண்டையில் மூளைக்கு பதிலாக மற்ற பாகத்தை வைத்து விட்டார்களோ என்றும், கபூர் என்பதால், வக்காலத்து வாங்குகிறீர்களா என்றும் அனல் பறக்கும் கேள்விகளும், ட்ரோல்களும், கனிகா கபூரை சப்போர்ட் செய்த சோனம் கபூருக்கு வரிசைக்கட்டி வந்து விழுகின்றன.