தாலியை கழற்றி பிரேஸ்லெட் போன்று கையில் கட்டிய நடிகை: திட்டித் தீர்க்கும் மக்கள்

By Siva

மும்பை: தாலியை பிரேஸ்லெட் போன்று கையில் அணிந்திருந்த சோனம் கபூரை மக்கள் விளாசியுள்ளனர்.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை கடந்த 8ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் தனது பெயரை சோனம் கபூர் அஹுஜா என்று மாற்றிக் கொண்டார்.

சோனம் தான் நடித்துள்ள வீர் தி வெட்டிங் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

சோனம் கபூர்

சோனம் கபூர்

வீர் தி வெட்டிங் விளம்பர நிகழ்ச்சிக்கு வந்த சோனம் கபூரின் கையை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் தாலியை பிரேஸ்லெட் போன்று கையில் அணிந்திருந்தார்.

திட்டு

திட்டு

தாலிக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அதை கெடுத்து விடாதீர்கள் சோனம். இதயத்திற்கு அருகில் இருக்க வேண்டும் என்று தான் தாலியை கழுத்தில் அணிவது. அதையே மாற்றிவிட்டீர்களே என்று பலரும் சோனம் கபூரை விளாசியுள்ளனர்.

திருமணம்

திருமணம்

திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தாலியை கழற்றி கையில் மாட்டிக் கொண்டு திரியும் சோனம் கபூரை என்ன சொல்வது என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெளிநாடு

வெளிநாடு

வெளிநாட்டில் வளர்ந்தால் ஃபேஷன் என்ற பெயரில் இப்படித் தான் இந்திய கலாச்சாரத்தை மதிக்காமல் கண்டபடி நடந்து கொள்ள தோன்றும் என்று சோனம் கபூரை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்துள்ளனர்.

மனைவி

மனைவி

சோனம் தாலியை கழற்றி கையில் மாட்டியதில் அவரது கணவர் ஆனந்துக்கே பிரச்சனை இல்லை. ஆனால் மற்றவர்கள் தான் தையா, தக்கா என்று குதிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X