பியூட்டி சோப் விளம்பரத்தில் நான் எப்படி?: தயங்கிய தனுஷ், தைரியம் சொன்ன சோனம்
மும்பை: லக்ஸ் அழகு சாதன சோப் விளம்பரத்தில் நடிக்கத் தயங்கிய தனுஷுக்கு சோனம் கபூர் தான் தைரியம் சொல்லி நடிக்க வைத்துள்ளார்.
லக்ஸ் சோப்பின் புதிய பிராண்ட் அம்பாசிடர் ஜோடியாக ராஞ்ஹனா ஜோடி தனுஷ், சோனம் கபூர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த விளம்பரத்தில் நடிக்க தனுஷ் கடந்த செவ்வாய்கிழமை மும்பை சென்றார்.
தனக்கு லுக் இல்லை என்று நினைக்கும் தனுஷ் லக்ஸ் விளம்பரத்தில் நடிக்க தயங்கியுள்ளார்.

நான் எப்படி?
அழகு சாதன சோப் விளம்பரத்தில் நான் எப்படி நடிப்பது? என்று தனுஷ் தயங்கியுள்ளார்.

சும்மா டிரை பண்ணுப்பா
தயக்கத்தில் இருந்த தனுஷிடம் தயங்காதே, சும்மா டிரை பண்ணுப்பா என்று சோனம் கபூர் தைரியம் சொல்லி நடிக்க வைத்துள்ளார்.

வித்தியாசமான அனுபவம்
லக்ஸ் விளம்பரப் படத்தில் நடித்தது தனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











