ஸ்டார் ஹீரோயினை சும்மா வருவது போல் காட்டுவதா? அதிரடியாக பாடல் காட்சியை சேர்த்த இயக்குனர் ராஜமவுலி

By

ஐதராபாத்: ஆர்ஆர்ஆர் படத்தில், ஸ்டார் ஹீரோயின் கெஸ்ட் ரோலில் நடிப்பதால், அவருக்காக ஒரு பாடல் காட்சி இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராஜமவுலி இயக்கி வரும் படத்துக்கு ஆர்.ஆர்.ஆர் என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர். இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா இணைந்து நடிக்கின்றனர்.

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சித்ராமஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்ட படம் இது. ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஆலியா பட் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பிரிட்டீஸ் நடிகை, டெய்சி எட்கர் ஜோன்ஸ் திடீரென விலகினார். அவருக்குப் பதிலாக, ஹாலிவுட் நடிகை ஒலிவியா மோரிஸ் ஒப்பந்தமாகி உள்ளார்.

ஐரிஸ் நடிகை

ஐரிஸ் நடிகை

மேலும் தோர், கிங் ஆர்தர் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரேய் ஸ்டீவன்சன், ஜேம்ஸ்பாண்ட் படமான எ வியூ டு கில், இண்டியானா ஜோன்ஸ், த லாஸ்ட் குருசேட் உட்பட பல படங்களில் நடித்துள்ள ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்.டி.ஆர்

பலத்த பாதுகாப்புடன் இதன் ஷூட்டிங் நடந்துவருகிறது. இருந்தும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் காட்சியை, ரசிகர் ஒருவர் செல்போனில் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது வைரலானது. இதையடுத்து படத்தின் எடிட்டிங் ரூமுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடும் சோதனைக்குப் பிறகே, அந்த அறைக்கு உள்ளோ, வெளியோ ஆட்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மனமில்லாத மவுலி

மனமில்லாத மவுலி

இந்நிலையில், இதன் படப்பிடிப்பில் சமீபத்தில் அஜய்தேவ்கன் இணைந்தார். இந்தி சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ஆலியா பட், ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக, இதில் கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதித்தார். ஆனால், டாப் நடிகையான அவரை, சும்மா வந்துவிட்டு போவது போல காட்ட மனமில்லாத ராஜமவுலி, அவருக்காக ஒரு பாடலை படத்தில் இணைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X