மயிலிறகாய் தாலாட்டும் பாடல்.. வேட்டையன் 3வது சிங்கிளாக யூடியூபில் உலவும் லாலேலோ பாட்டு!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் எங்கும் வேட்டையன் ஃபீவர் தான் காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், முன்னதாக படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியானது . இந்த இரு பாடல்களுமே மிகச்சிறப்பாக அமைந்துள்ள நிலையில் தற்போது வேட்டையன் படத்தின் மூன்றாவது சிங்கிள் என இணையத்தில் ஒரு தாலாட்டு பாடல் வைரலாக பரவி வருகிறது .இந்த பாடலும் மனதிற்கு இதமான இசையுடன் சிறப்பான வாய்சுடன் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த பாடல் வேட்டையன் படத்தின் 3வது சிங்கிள் தான் என்று ரசிகர்களே சற்று குழம்பிதான் போனார்கள்.

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் குறித்த ஃபீவரில் ரசிகர்கள் கட்டுண்டு கிடக்கின்றனர். இதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு இன்னும் சில தினங்கள் காத்திருக்க வேண்டியது அவசியம். எப்போதுமே ரஜினிகாந்தின் திரைப்படங்களை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள். ரஜினிகாந்த் என்பது ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. தமிழ் நடிகராக இருந்த போதிலும் பாலிவுட்லிருந்து சர்வதேச அளவில் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளையும் தன்னுடைய நடிப்பால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வருபவர் ரஜினிகாந்த். இவர் இதுவரை 170 படங்களில் நடித்து முடித்துள்ளார்.
ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணி: தற்போது 171வது படமாக கூலி படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து நடித்து வருகிறார். சமீப காலங்களாக முன்னணி இளம் இயக்குனர்களை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இது இவருக்கு சிறப்பாகவே ஒர்க் அவுட் ஆகிறது. கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். இந்த படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் தற்போது ஜெய் பீம் என்ற படத்தை கொடுத்திருந்த டிஜே ஞானவேலுடன் இணைந்துள்ளார். இவர்களது கூட்டணியில் வேட்டையன் படம் இன்னும் சில தினங்களில் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
அடுத்தடுத்த பாடல்கள்: வேட்டையன் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை மிகச் சிறப்பான வகையில் தயாரிப்பு தரப்பான லைகா நிறுவனம் செய்து வருகிறது. அந்த வகையில் படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அடுத்தடுத்து வேட்டையன் படம் குறித்தும் ரஜினிகாந்துடன் அவர்கள் இணைந்த சந்தோஷம் மற்றும் அனுபவம் குறித்தும் பகிர்ந்து வருகின்றனர். இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரஜினியின் ஃபேன் பாய் என்ற வகையில் அடுத்தடுத்து சிறப்பான இரு பாடல்களை கொடுத்துள்ளார்.
வேட்டையன் படத்தின் 3வது சிங்கிள்?: வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மனசிலாயோ மற்றும் 2வது சிங்கிள் ஹண்டர் வண்டார் என அடுத்தடுத்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்நிலையில் அடுத்ததாக படத்தின் 3வது சிங்கிளும் வெளியாக உள்ளதாகவும் இதில் ரஜினிகாந்த் மற்றும் மஞ்சு வாரியரின் கெமிஸ்ட்ரி மேலும் ரசிகர்களை கவரும் வகையில் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தற்போது வேட்டையன் படத்தின் 3வது சிங்கிள் என்று யூடியூபில் ஒரு பாடல் உலவி வருகிறது. இந்தப் பாடல் மயிலிறகாய் தாலாட்டும் வகையில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு சதீஷ்குமார் என்பவர் இசையமைத்துள்ளார்.
தாலாட்டும் பாடல்: இந்த பாடலில் வேட்டையன் படத்தின் ஸ்டில்களை வைத்து பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மிகச் சிறப்பான வகையில் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் இது வேட்டையன் படத்தின் மூன்றாவது சிங்கிள்தானோ என்று ரசிகர்கள் சற்று குழம்பித்தான் போனார்கள். எந்தவிதமான அறிவிப்பும் இல்லாத நிலையில் இந்த பாடல் எப்படி வெளியானது என்றும் யோசித்த நிலையில், இது வேட்டையன் படத்தின் பாடல் இல்லை என்பது தெரியவந்தது. ரஜினிகாந்தின் மனைவியாக மஞ்சு வாரியரின் தாலாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது இந்தப்பாடல். இந்தத் தாலாட்டில் ரசிகர்களும் தங்களை மறந்து தான் போயியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











