Nayanthara With Shah Rukh Khan: ஷாருக்கானுடன் சேர்ந்து ஆட்டம் போடும் நயன்தாரா - ஏன் தெரியுமா?

மும்பை: Nayanthara With Shah Rukh Khan (ஷாருக்கானுடன் நயன்தாரா) அட்லீ இயக்கிவரும் ஜவான் படத்தின் பாடல் ஷூட்டிங் இன்று பாந்த்ரா கோட்டையில் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. மௌன ராகத்தின் அப்டேடட் வெர்ஷன் என அந்தப் படம் விமர்சிக்கப்பட்டாலும் படம் மெகா ஹிட்டானது. முதல் படத்தையே மெகா ஹிட்டாக கொடுத்துவிட்டால் அந்த இயக்குநரின் கிராஃப் உச்சம் சென்று விடும் என்ற கோடம்பாகத்தின் விதியின்படி அட்லீயின் கிராஃப் ராஜா ராணி படத்துக்கு பிக்கப் ஆனது.

song shooting of Atlees Jawan is going to take place today at Bandra Fort

விஜய்யுடன் செய்த சம்பவங்கள்: ராஜா ராணி ஹிட்டுக்கு பிறகு விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். அந்தப் படமும் வேறு படத்திலிருந்து உருவப்பட்டது என்று விமர்சனத்தை சந்தித்தாலும் அவரின் மேக்கிங் படத்தை காப்பாற்றியது. இதனால் தெறி ஹிட் ஆனது. அதனையடுத்து விஜய்யுடன் மெர்சல், பிகில் படங்களை செய்தார் அட்லீ. இதில் மெர்சல் மெகா ஹிட்டாக பிகில் தோல்வி படமாக அமைந்தது.

ஷாருக்கானுடன் அட்லீ: மொத்தமே தனது கேரியரில் நான்கு படங்களை இயக்கிய அட்லீக்கு அடித்தது ஜாக்பாட். ஆம், வெகு சில படங்களிலேயே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. படத்துக்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா வரிசையில் நேரடி ஹிந்தி படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர் என்ற பெருமையை தற்போது பெற்றிருக்கிறார் அட்லீ.

விஜய் சேதுபதி, நயன்தாரா: ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாகிவரும் ஜவான் நிச்சயம் அட்லீயின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக சில நொடி ஆக்‌ஷன் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் லீக்காகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

விறுவிறு ஷூட்டிங்: ஜவான் படத்தை விரைந்து முடிப்பதற்கு அட்லீ தீவிர முனைப்போடு செயலாற்றி வருகிறார். இதனால் படத்தின் ஷூட்டிங்கை மும்முரமாக நடத்திவருகிறார். படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பு சென்னையிலும் நடைபெற்றது. அப்போது விஜய் ஷாருக்கானை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜவான் படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவுக்கான காட்சிகளை 99 சதவீதம் முடித்துவிட்ட அட்லீ இப்போது பாடல்களை படமாக்கும் வேலையில் இறங்கியிருக்கிறாராம். நேற்று பல்லார்ட் எஸ்டேட்டில் பாடல் ஷூட்டிங் நடந்ததாகவும் அதில் ஷாருக்கும், நயனும் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

பாந்த்ரா கோட்டை: இன்று பாடலுக்கான ஷூட்டிங் மும்பை பாந்த்ரா கோட்டையில் நடப்பதாக தெரிகிறது. இன்று நடக்கும் ஷூட்டிங்கிலும் நயன்தாராவும், ஷாருக்கானும் கலந்துகொள்ளவிருக்கின்றனராம். பாடலுக்கான நடன அமைப்பை ஃபரா கான் மேற்கொண்டுவருகிறார். படத்தை ஜூன் இரண்டாம் தேதி வெளியிட அட்லீ திட்டமிட்டிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X