பாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கம், எனை நோக்கி பாயும் தோட்டா கைவிடப்பட்டதா?: உண்மை இதோ
Recommended Video

சென்னை: எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்று தெரிய வந்துள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று தெரியாமல் இருந்தனர் ரசிகர்கள்.
மறுவார்த்தை பேசாதே, விசிறி, நான் பிழைப்பேனா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் படத்தின் பாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

எனை நோக்கி பாயும் தோட்டா
எனை நோக்கி பாயும் தோட்டா பட பாடல்கள் கவுதம் மேனனின் 'ஒன்றாக' யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டப்பட்ட நிலையில் தற்போது நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து படம் கைவிடப்பட்டதோ என்று ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

சோனி
எனை நோக்கி பாயும் தோட்டா படம், ரசிகர்கள் பயந்தது போன்று கைவிடப்படவில்லை. படத்தின் இசை உரிமையை வாங்க சோனி நிறுவனம் முன்வந்துள்ளது. இதையடுத்தே பாடல்கள் யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

கவுதம் மேனன்
முன்னதாக இசை உரிமை கவுதம் மேனனிடம் இருந்தது. அதனால் அவர் தனது 'ஒன்றாக' யூடியூப் பக்கத்தில் பாடல்களை வெளியிட்டார். தற்போது இசை உரிமை சோனிக்கு விற்கப்படுவதால் பாடல்கள் பிரைவேட் செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் ரசிகர்களால் அதை பார்க்க முடியவில்லை. சோனி நிறுவனத்துடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதும் பாடல்கள் அதன் யூடியூப் பக்கத்தில் வெளிவருமாம்.

மே மாதம்
எனை நோக்கி பாயும் தோட்டா படம் நிச்சயமாக, சத்தியமாக வரும் மே மாதம் ரிலீஸ் ஆகுமாம். படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளாராம் கவுதம் மேனன். அதனால் தனுஷ் ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம்.


Click it and Unblock the Notifications











