»   »  மபடாத பாடுபட்ட சோனியா ஷெட்டி!

மபடாத பாடுபட்ட சோனியா ஷெட்டி!

Subscribe to Oneindia Tamil

புதிய நடிகை சோனியா ஷெட்டியை சோகம் துரத்தி துரத்தி தொல்லை பண்ணுகிறது. நள்ளிரவில் அறைக் கதவைத் தட்டி சிலர் அட்டகாசம் செய்தது போதாது என்றுஇப்போது ரசிகர்களிடம் சிக்கி பெரும் சில்மிஷத்துக்கு ஆளாகியுள்ளார் சோனியா.

என்.எஸ்.ஆர். என்பவர் தானே ஹீரோவாக நடித்து, இயக்கும் படம் அன்றில் பறவைகள். இப்படத்தில் கன்னடத்தைச் சேர்ந்த சோனியா ஷெட்டி என்பவர்ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில் பக்கம் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சோனியா ஷெட்டி மற்றும் துணை நடிகைகள் தங்கியிருந்த ஹோட்டலுக்குநள்ளிரவில் வந்த சிலர் அறைக் கதவைத் தட்டினர்.

துணை நடிகைகளிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரகளையில் ஈடுபட்டவர்கள் தேமுதிகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் ஒரு வழியாக முடிந்த நிலையில், இன்னொரு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணராஜபுரம், ஜேம்ஸ் டவுன் ஆகிய பகுதிகளில் சோனியாஷெட்டி, என்.எஸ்.ஆர், வையாபுரி ஆனந்தராஜ், சுந்தரராஜன் ஆகியோர் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படமாக்கினர்.

அப்போது சோனியா ஷெட்டி சற்றே கிளாமரான உடையில் இருந்தார். அவருக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த சில ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு, சோனியாவின் அழகுக் கோலத்தை செல்போன் கேமரா மூலம் படம் பிடிக்க ஆரம்பித்தனர்.

இதனால் கடுப்பான சோனியா, படம் பிடித்தவர்களுடன் சண்டையில் இறங்கினார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ரசிகர்கள் தொடர்ந்து சோனியாவை தங்களதுசெல்லுக்குள் தள்ளிக் கொண்டிருந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. என்.எஸ்.ஆர். வந்து இரு தரப்பையும் சமாதானப்படுத்தினார். ரசிகர்களை அங்கிருந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

ஒரு வழியாக தகராறு அடங்கி படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்து சோனியா ஷெட்டி காரில் கிளம்பினார். அப்போது ரசிகர்கள் கூட்டமாக சோனியா இருந்தகாரை சூழந்து கொண்டனர். சோனியாவைப் பார்க்க வேண்டும், இறங்கச் சொல்லுங்கள் என்று வற்புறுத்தினர்.

இறங்காவிட்டால் ரசிகர்கள் ரசாபாசத்தில் இறங்கி விடுவார்கள் என்று பயந்த ஹீரோ கம் இயக்குனர் என்.எஸ்.ஆர். காரை விட்டு இறங்கி வருமாறு சோனியாவைக்கேட்டார். ஆனால் அவரோ மறுத்து விட்டார். வேண்டுமானால் கண்ணாடியை இறக்கி விடுகிறேன் என்றார்.

ரசிகர்கள் இந்த டீலுக்கு ஒத்துக் கொண்டனர். இதையடுத்து கண்ணாடியை இறக்கி விட்டு ரசிகர்களைப் பார்த்து புன்னகைத்தபடி கையை ஆட்டினார் சோனியா.அப்போது ஒரு குறும்புக்கார ரசிகர், கையை காருக்குள் விட்டு சோனியாவின் கன்னத்தைப் பிடித்து ஒரு கிள்ளு கிள்ளி குஷியானார்.

இதனால் கடுப்பாகி விட்ட சோனியா கடும் கோபமடைந்தார். அந்த ரசிகர்களை சப்தம் போட்டுத் திட்டினார். பின்னர் கார் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

ஹோட்டலுக்கு வந்து சேர்ந்த சோனியா ஷெட்டி படு கோபமாக இருந்தாராம். தொடர்ந்து இப்படி சில்மிஷங்கள் தொடருவதால் படப்பிடிப்புக்கு வருவாரா அல்லதுபேக்கப் ஆகி சென்னைக்குப் பறப்பாராா என்று படப்பிடிப்புக் குழுவினர் பயந்து போயுள்ளனராம்.

சக்கரைக் கட்டியாவே இருந்தாலும் தொட்டது தப்புல்லா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil